லியோ இசை வெளியீட்டு விழா ரத்து: விஜய் பதிலடி தர நல்ல சான்ஸ்! வீடியோவிலேயே குட்டி கதை ரிலீஸ் பண்ணலாமே
சென்னை: திமுக ஆண்டால் என்ன? அதிமுக ஆண்டால் என்ன? விஜய் படங்கள் ரிலீஸ் சமயத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் நடிகர் விஜய்.
நாம ஒண்ணு பண்ணினால் பிரச்சனை பண்றாங்களா.. அப்போ நாம கரெக்ட்டா தான் பண்றோம் என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய தளபதி விஜய்யின் பேச்சை லியோ படத்துக்கு முன்னதாக கேட்க ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதிர்ச்சியளிக்கும் விதமாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டனர்.

ஆனால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தாக உண்மையான காரணத்தை சொல்லாமல் ரசிகர்கள் மீது பழி போடுவது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரசிகர்கள் தான் காரணமா?: அதிகமாக ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவுக்கு டிக்கெட்டுக்காக முண்டியடித்துக் கொண்டு வந்ததுதான் லியோ வெளியீட்டு விழாவே நடைபெறாமல் போவதற்கான காரணம் என தயாரிப்பு நிறுவனம் சொல்லி இருப்பதை விஜய் ரசிகர்கள் ஒருத்தர் கூட நம்பவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது.
லியோ படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், உலக அளவில் அதற்கான புரமோஷனையும் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் விஜய் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், சொந்த ஊரிலேயே ஒரு ஆடியோ வெளியீட்டு விழா கூட முடியாத நிலையில் உள்ளது ரசிகர்களை ரொம்பவே மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது.
வீடியோ வெளியிட்டாலே போதும்: இந்நிலையில், மாமன்னன் படத்தில் வடிவேலுவை பிரச்சாரம் செய்ய ஊருக்குள் நுழைய விடாமல் சதி செய்து தடுக்கும்போது டிஜிட்டல் மீடியா மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டு தேர்தலையே வென்று விடுவார்.
அதே போல தற்போது தளபதி விஜய்யும் தனது குட்டி ஸ்டோரியை வீடியோவாக தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டாலே போதும் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் கொண்டு வந்து விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டி விடுவார்கள்.
புரமோஷன் முக்கியம் பிகிலு: மேலும், லியோ படத்தின் ரிலீசுக்கு முன்னதாக மிகப்பெரிய புரோமோஷன் ஆகவும் அது மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்காக கண்டிப்பாக லியோ படக் குழுவினருடன் பேட்டி அல்லது தனியாக குட்டி ஸ்டோரி பேசி ஒரு வீடியோவை வெளியிட்டால் கொந்தளித்துக் கொண்டு இருக்கும் ரசிகர்கள் நிச்சயம் ஹேப்பி ஆவார்கள்.
சென்னையில் லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெறாது என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், கொச்சியில் இசை வெளியீட்டு விழாவை நடத்த சில ஆஃபர்கள் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே விஜய் ரசிகர்களுக்கு சிறப்பான செய்தி ஒன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











