விஜய் பெயரை சொன்னாலே முதல் வாரத்திலேயே 100 சதவீதம் லாபம்.. உட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் பளிச்!
சென்னை: இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2, கங்குவா மற்றும் வேட்டையன் உள்ளிட்ட படங்கள் பெரிதாக ஓடாமல் போக காரணமே படத்துக்கு எதிராக குவிந்த விமர்சனங்கள் தான் என்றும் இனிமேல், தியேட்டருக்குள் யூடியூபர்களை பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க மாட்டோம் என உட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவை 5 கேட்டகிரியாக பிரித்துக் கொள்ளலாம் என்றும் கற்பனை படங்கள், நிஜக் கதைகள், குறைந்த பட்ஜெட் படங்கள், புதிய முயற்சிகள் மற்றும் விஜய் படங்கள் என பிரிக்கலாம் என உட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் பேசிய காட்சிகளை தளபதி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும், விஜய்க்கு அடுத்த இடத்தில் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தான் உள்ளது என்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் சரியாக ஓடவில்லை என்றும் கூறியுள்ளார்.
விஜய் பெயரை சொன்னாலே: படத்தின் கதை, யார் இயக்குநர், நல்லா இருக்கா? இல்லையா? மோசமான விமர்சனங்கள் என எந்தவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் அந்த படத்தில் விஜய் இருந்தால் போதும். அவருடைய பெயரை சொன்னாலே முதல் வாரத்திலேயே 100 சதவீதம் லாபம் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்துவிடும் என உட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ரியல் கோட்: இந்த ஆண்டு விஜய் நடித்த கோட் திரைப்படம் 485 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் 25 நாட்களை கடந்த நிலையில், 300 கோடி ரூபாய் வரை வசூல் வந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த இரண்டு படங்களை தவிர வேற எந்த படமும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பெரிதாக வசூல் செய்யவில்லை. விஜய் தான் ரியல் கோட் எனக் கூறியுள்ளார்.
விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன்: மேலும், ரஜினிகாந்தின் வேட்டையன் படம், கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட படங்கள் பெரிதும் சரிவை சந்தித்துள்ளன. விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் கோலிவுட்டில் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் கோட்டையை பிடித்திருக்கிறார். மாரி செல்வராஜின் வாழை, சுந்தர். சி இயக்கி நடித்த அரண்மனை 4, சூரி நடித்த கருடன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து உள்ளிட்ட படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய லாபத்தை பெற்ற படங்களாக உள்ளன என்றார்.
தியேட்டரில் யூடியூபர்களுக்கு அனுமதி கிடையாது: எங்க தியேட்டரில் வந்து புதிய படங்களின் விமர்சனங்களை எடுத்துவிட்டு அந்த படம் நல்லா இல்லைன்னு மக்கள் சொல்லுவதை எல்லாம் காட்டி தியேட்டர் பிசினஸையே கெடுக்கும் யூடியூபர்களை இனிமேல் தியேட்டர் வளாகத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப் போவதில்லை என்கிற முடிவை எடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











