twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஸ்கிரிப்டை நயன்தாராவும் சமந்தாவும் அப்படி ரசிச்சாங்க... விக்னேஷ் சிவன்

    By
    |

    Recommended Video

    Kaathuvaakula Renduu Kaadhal | Vignesh Shivan | Nayanthara | Samantha | VJS

    சென்னை: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஸ்கிரிப்டை நயன்தாராவும் சமந்தாவும் அதிகம் ரசித்தார்கள் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

    சிம்புவின் 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய விக்னேஷ் சிவன், அடுத்து இயக்கிய படம், நானும் ரவுடிதான்.

    இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்திருந்தனர்.

    காதல் மலர்ந்தது

    காதல் மலர்ந்தது

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம், 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இதன் ஷூட்டிங்கில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில், விக்னேஷ் சிவன், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். கார்த்திக், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

    மெகா பட்ஜெட்

    மெகா பட்ஜெட்

    அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மெகா பட்ஜெட் படத்தை இயக்க இருந்தார் விக்னேஷ். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது. பட்ஜெட் அதிகமானதால் அந்தப் படத்தை தயாரிக்க, மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வேறு கதையை விக்னேஷ் சிவன் தயார் செய்தார். அதுதான், காத்துவாக்குல ரெண்டு காதல்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக நயன்தாரா, சமந்தா இருவரும் நடிக்கின்றனர். நயன்தாராவுடன் சமந்தா இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை. இதன் அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது. 'நானும் ரவுடிதான்' படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பு பேசப்பட்டது. அதே டீம் இந்தப் படத்திலும் இணைவதால் இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    டைட்டிலில் கதை

    டைட்டிலில் கதை

    இந்நிலையில், இந்தப் படத்தின் கதை நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் அவ்வளவு பிடித்திருந்தது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, படத்தின் டைட்டிலே கதையை சொல்லியிருக்கும். இது நல்ல ரொமான்டிக் காமெடி கதை. இரண்டு வருடத்துக்கு முன்பே திட்டமிட்ட கதை. இதன் ஸ்கிரிப்ட்டை, விஜய்சேதுபதியும் அதிகம் ரசித்தார்.

    எடையை குறைக்கிறார்

    எடையை குறைக்கிறார்

    படத்துக்காக, விஜய் சேதுபதி உடல் எடையை குறைக்க இருக்கிறார். ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. தென்னிந்தியாவின் சில பகுதிகளில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். அவரது இசையின் ரசிகன் நான். எனது படத்துக்கு சிறந்த இசையை அவர் கொடுப்பார். இந்தப் படத்துக்கும் அதை எதிர்பார்க்கிறேன்' என்றார்.

    English summary
    Vignesh sivan said, Vijay sethupathi, Nayanthara and Samantha really loved the kaathu vaakula rendu kathal script
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X