டேய் கூப்ட்டு போடா கோபப்பட்டு கத்திய புஸ்ஸிஆனந்த்.. Cool Coolனு சொன்ன விஜய்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியபோது கோபப்பட்டு கத்திய புஸ்ஸி ஆனந்தை அமைதியாக இருக்கும்படி கூறினார் விஜய்.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18ந் தேதி வரலாறு காணாத கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சம் மூலைக்கரைப்பட்டியில் சுமார் 70 சென்டிமீட்டர் வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பாபநாசம், மணிமுத்தாறு சேர்வலாறு போன்ற அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், பல இடங்களில் கால்வாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

மழை வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் என அதிக அளவிலான சேதமடைந்தன. மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தன. குடியிருப்பு பகுதிகளை சுற்றி 7 அடிக்கு தண்ணீர் தேங்கியால் அங்கு மாட்டிக்கொண்ட மக்கள் பரிதவித்தனர் அவர்களுக்கு ஹெலிகாப்டர் உணவு வழங்கப்பட்டது.
தேவையான உதவி: இதனிடையே, நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளையும், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்குமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால், நிவாரணம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு படகுகள் மூலம் சென்று வழங்கினார்கள். இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது.
யாருப்பா விஜய்: இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பத்திற்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்டம் வழங்கும் விழா, திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி நகரில் மாதா மஹாலில் நடைபெற்றது. அப்போது, உதவி பெற வந்த ஒரு மூதாட்டி யாருப்பா விஜய்...யாருப்பா விஜய் என கேட்டுக்கொண்டே மேடையின் மீது அங்கும் இங்கும் ஓடினார்.
அப்போது, அவரை அன்போடு அழைத்த விஜய், நான் தான் விஜய் என்று சொன்னார். உடனே அந்த மூதாட்டி விஜய்யின் கன்னத்தை பிடித்து கிள்ளி, கைகளை பிடித்தார். இதைப்பார்த்து டென்ஷனான புஸ்ஸி ஆனந்த் டேய்... கூப்ட்டு போங்கடா என ஆத்திரத்தில் கத்தினார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த விஜய், cool..cool அனைவரும் பின்னால் போங்க என்று சொல்லி புஸ்ஸி ஆனந்தை அமைதிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











