Vijay: இதோ ஆரம்பிச்சுட்டாங்கள... வாயில் சிகரெட்டுடன் டான்ஸ்... விஜய் ரசிகைகள் அட்ராசிட்டி
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் முதல் பாடல் 'நான் ரெடி' விஜய் பிறந்தநாள் தினத்தில் வெளியானது.
இப்பாடலில் விஜய் வாயில் சிகரெட்டுடன் நடனமாடியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விஜய் ஸ்டைலில் வாயில் சிகரெட்டுடன் அவரது ரசிகைகள் சிலர் நடனமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஸ்டைலில் சிகரெட்டுடன் நடனமாடிய ரசிகைகள்: விஜய் நடித்து வரும் லியோ படத்துக்கு தாறுமாறாக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் லியோ ப்ரீ தியேட்டர் ரிலீஸும் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்தப் படம் மீதான ஹைப்பை எகிற வைக்கும் வகையில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த வாரம் வெளியானது.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையில் விஜய் இப்பாடலை பாடியுள்ளார். 2000 டான்ஸர்களுடன் விஜய்யும் இறங்கி செம்ம மரண குத்து போட்டுள்ளார். அதேபோல், பாடல் வரிகளும் ஷார்ப்பாக விஜய்யின் கெத்துக்கு மாஸ் சேர்த்துள்ளது.
ஒட்டுமொத்தமாக நான் ரெடி பாடல் எல்லாவிதத்திலும் சிறப்பாக இருந்தாலும், இதில் விஜய் சிகரெட்டுடன் டான்ஸ் ஆடியது சர்ச்சைகளை கிளப்பியது. ஏற்கனவே இப்பாடலின் போஸ்டர் வெளியான போதே அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் விஜய்க்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். கடந்த சில வருடங்களாக தனது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்காமல் இருந்த விஜய், தற்போது மீண்டும் அப்படி செய்ததை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேபோல், மாணவர்களை அழைத்து கல்வி விருது கொடுக்கும் விஜய், அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக இப்போது தங்களுக்கு பிடித்த பாடல்களுக்கு இளைஞர்கள் நடனமாடி, அதனை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் ரீல்ஸ்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
அப்படி லியோ படத்தின் நான் ரெடி பாடலுக்கு இளம் பெண்களும் இளைஞர்களும் இணைந்து நடனமாடியுள்ளனர். அப்போது அவர்கள் வாயில் சிகரெட்டுடன் நடனமாடியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஜய் ஸ்டைலில் அப்படியே ரீல்ஸ் செய்ய வேண்டும் என நினைத்த இளம் பெண்கள், சிகரெட்டுடன் நடனமாடியது தவறான செயல் என பலரும் விமர்சித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











