Vijay: "ரஜினி பண்ண அதே தப்பு... வேணாம் விஜய்ண்ணா..” லியோ ட்ரெய்லருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
சென்னை: லியோ படத்தின் ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தைகள் மிகப் பெரிய சர்ச்சையாகியுள்ளது.
மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி செய்துவரும் விஜய், சினிமாவில் இப்படியெல்லாம் பேசுவது சரியா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ரஜினி செய்த அதே தவறை தான் தற்போது விஜய்யும் செய்துள்ளதாக கண்டனங்கள் வலுக்கின்றன.
விஜய்யின் தவறை சுட்டிக் காட்டி டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது இந்தப் பதிவு.

இது தப்பு வேணாம் விஜய்ண்ணா: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனை முன்னிட்டு லியோ ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர், விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் ஆகியோரிடம் கடும் எதிர்ப்பையும் நெகட்டிவான விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
நேற்று மாலை வெளியான லியோ ட்ரெய்லரில், விஜய் விரக்தியாக பேசும் ஒரு வசனத்தில், சரளமாக பயன்படுத்தக் கூடிய கெட்டவார்த்தை இடம்பெற்றிருந்தது. இந்த வசனம் திரையரங்கில் பீப் செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அது தெரிந்தும் விஜய் இப்படியொரு வசனம் பேசி நடித்தது, அவரது ரசிகர்களிடமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி ஊடகவியலாளர் ஆவுடையப்பன் தனது டிவிட்டரில் விமர்சனத்தையும் வேண்டுகோளையும் சேர்த்தே வைத்துள்ளார். அதில், "இது வேணாம் விஜய்ணா... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ டிரைலர் நல்லாவே இருந்தது. சரி, நடுவில் அந்த வார்த்தை ஏன்? படத்தில் இந்த வசனம் பீப் ஆகப் போகிறது என நான் அறிவேன், ஆனால் இந்த டிரைலரில்? ஏன்? முன்பு ஒரு முறை 'டுபுக்கு' என வடிவேலு ஒரு டையலாக் பேசியது நினைவு வரும்.
அந்த வார்த்தை கூட வேறு வார்த்தையைத் திருப்பி போட்டது தான், இன்று அந்த வார்த்தை எவ்வளவு பேமஸ் என்பது நான் சொல்லத் தேவையில்லை. சர்வசாதாரணமாகக் குழந்தைகள் அதைச் சொல்கிறார்கள். ஒருமுறை திருமண வீட்டில் நான் பார்த்தது, கணவன் மனைவி பேசிட்டு இருக்க ஏதோ விளையாட்டாகப் பேசுவது போல அவர்களது மகன் சந்திரமுகியில் "ஒருத்தனுக்கு எந்திரிக்கவே வக்கு இல்லையாம்...." டயலாக்கை அந்த சபையிலே சொல்லிவிட்டான். ஒரு நிமிஷம் ஆடிதான் யோய்டோம்.

நிச்சயம் அது பொருள் புரிந்து சொன்னது அல்ல. ஆனால் அது வடிவேலு, ரஜினி இருவரும் குழந்தைகளிடம் ஏற்படுத்திய தாக்கம். படத்தில் வரும் தவறான விஷயங்கள், நடவடிக்கைகள் இது தவறு என்பதை வலியுறுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, Potential or Vulnerable Sect-ஐ ஈசியாக பாதிப்பதாகவோ அல்லது Normalise செய்யும்படியோ அமைந்துவிடக்கூடாது. இயக்குநர் லோகேஷ் மீது பெரிய மதிப்பு உண்டு எனக்கு. படத்தில் இது முக்கியமான இடமாக இருக்கும் என்றே முழுமையாக நம்புகிறேன்.
அப்படி இருந்தும் படத்தில் பீப் ஆகப் போகும் வசனம் இங்க அவசியம் இல்லை என நினைக்கிறேன். உங்கள் முதல் படமான மாநகரத்தில் சென்னையில் ரொம்ப கேஷுவாலாக பேசப்படும் ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி. ஏன் இதை நார்மைலஸ் ஆனது எனக் கேட்க நீங்கள் வச்ச வசனம் இன்னும் நினைவில் அப்படியே இருக்கிறது. அதே லோகேஷ் தான் இந்த வசனத்தை வைத்தாரா? என யோசிக்க வைக்கிறது தமிழ்நாட்டை பொருத்தமட்டில் "Vijay is more than a Star". அதானால் தான் சொல்கிறோம் "இது வேணாம் விஜய்ணா" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு ரசிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











