Vijay: "கவர்ல 101 ரூபாய்.. ஒரு மாருதி 800 கார்.." விஜய்யை வெறித்தனமாக வச்சு செய்யும் ரஜினி ஃபேன்ஸ்!
சென்னை: ஜெயிலர் வெற்றியை முன்னிட்டு ரஜினி, இயக்குநர் நெல்சன் இருவருக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கார் பரிசாக வழங்கினார்.
முன்னதாக விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது.
பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காத பீஸ்ட் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்களே அதிகம் கிடைத்தன.
இந்நிலையில், பீஸ்ட் தோல்விப் படம் என்றாலும் விஜய் தான் நம்பர் 1 ஹீரோ. அதனால் அவருக்கு மாருதி 800 கார் பரிசாக கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய்க்கு மாருதி 800 கார்: கடந்த மாதம் தொடங்கிய ஜெயிலர் ஃபீவர், இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169வது படமாக வெளியான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டாருக்கு ரியலான கம்பேக் படமாக ஜெயிலர் அமைந்துள்ளது.
இதனையடுத்து ரஜினிக்கு ரூ.80 கோடி சம்பளம் தவிர, லாபத்தில் 100 கோடி ரூபாய் ஷேர் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான செக்கை ரஜினியிடம் கலாநிதி மாறனே நேரில் சென்று வழங்கினார். அதேபோல், 1.5 கோடி மதிப்பிலான BMW X7 காரையும் ரஜினிக்கு கிஃப்ட்டாக கொடுத்தார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சனுக்கு 1.5 கோடி மதிப்புடைய போர்ஸே காரை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்.
இந்தாண்டு தமிழில் வெளியான படங்களில் ஜெயிலர் தான் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஜெயிலர் வெளியாகும் முன்பு, இன்றைய தேதிக்கு விஜய் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங், அவர் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார் என சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர். அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயிலர் வசூலில் சாதனை படைத்துள்ளது.
இதனால், உக்கிரமாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், தளபதி விஜய்யை தாறுமாறாக சம்பவம் செய்து வருகின்றனர். "ஏம்ப்பா சன் பிக்சர்ஸ் நம்ம விஜய் அண்ணாவுக்கு ஒரு கவர்ல 101 ரூபாய் வைத்து, ஒரு மாருதி 800 காராவது வாங்கி கொடுங்கய்யா பீஸ்ட் படத்துக்காக. பாவம்யா அவரு... இப்ப அவருதான் நம்பர் 1 வேற" என ட்ரோல் செய்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் கடந்தாண்டு வெளியானது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட், நெகட்டிவான விமர்சனங்களால் தோல்வியடைந்தது. பாக்ஸ் ஆபிஸில் வேகமாக 100 கோடி வசூலித்த நிலையில், அதன்பின்னர் பெரிதாக கலெக்ஷன் செய்யவில்லை. இதனிடையே வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்தும் பெரும் சர்ச்சையானது. இதற்கு ரஜினியும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த சர்ச்சையெல்லாம் முடிந்து இப்போது ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. இதனால், மீண்டும் விஜய்யை அவரது பீஸ்ட் படத்தின் தோல்வியை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதேநேரம், சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய் இடையே எவ்வித மோதலும் இல்லையென்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











