Thapalathy 69: தளபதி 69 படத்தின் பட்ஜெட்.. சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா? மியூசிக் டைரக்டர் இவரா?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள அவரது கடைசி படமான தளபதி 69 (Thapalathy 69) படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக அண்மையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள தி கோட் படத்திற்கு மட்டும் இவரது சம்பளம் ரூபாய் 200 கோட் என தயாரிப்பாளரே ஒப்புக்கொண்டார். தளபதியின் கடைசி படமான தளபது 69 படம் குறித்த அறிவிப்பினை, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு இன்று அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட், சம்பளம், படக்குழுவினர் யார் யார் என்ற தகவல்கள் குறித்த பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

கே.வி.என் புரெடெக்சன்ஸ் கம்பனியைப் பொறுத்தவரையில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக கால் பதிக்கின்றார்கள். தமிழில் தங்களது முதல் படத்தினைத் தயாரிக்க களமிறங்கியுள்ளனர். அந்த படம் தமிழின் உச்சகதாநாயகனின் படமாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தளபதி விஜய்யின் படத்தினைத் தயாரிக்க முன் வந்துள்ளனர். படத்தின் அறிவிப்பு தொடர்பாக இவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், 5 மணிக்கு ரெடியா இருங்க நண்பா மற்றும் நண்பிகளே எனத் தெரிவித்துள்ளனர்.

vijay thalapathy 69 vijay salary 69

தளபதியின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. குறிப்பாக படத்தின் பட்ஜெட், தளபதியின் சம்பளம், படத்தில் யாரெல்லாம் நடிக்கின்றார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டே உள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். படத்தில் சிம்ரன் நடிக்கவுள்ளதாக பேச்சுகள் ஏற்கனவே உலா வருகின்றது.

பட்ஜெட் & சம்பளம்: கோட் படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 386 கோடிகள் என தயாரிப்பளர் அர்ச்சனா தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே, தளபதி 69 படத்தில் விஜய்யின் சம்பளம் தொடர்பாக தமிழ்த் திரையுலகில் தகவல்கள் உலா வந்தது. அதாவது தளபதி 69 படத்திற்கு விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 275 கோடிகளாம். இதுமட்டும் இல்லாமல், ஜி.எஸ்.டியும் தயாரிப்பு நிறுவனமே செலுத்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது. அதாவது, விஜய்யின் சம்பளத்திற்காக மட்டும் தயாரிப்பு நிறுவனம் ரூபாய் 300 கோடிகள் வரை செலவு செய்கின்றதாம். மொத்தத்தில் படத்தின் பட்ஜெட் சுமார் 450இல் இருந்து 500 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

கடைசி படம்: ஏற்கனவே படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படி இருக்கும்போது, இந்த அறிவிப்பின்போது படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கின்றார்கள் என்ற தகவல்களும் இடம் பெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதால், இந்தப் படம்தான் அவரது கடைசி படம். எனவே இந்தப் படத்தின் மீது அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இசை அமைப்பாளர்: குறிப்பாக படத்தின் கதாநாயகி, படத்தின் இசை அமைப்பாளர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. கோட் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எந்தவிதமான ஈர்ப்பினையும் ஏற்படுத்தவில்லை. மட்ட பாடல் மட்டும் செம ட்ரெண்ட் ஆனது. எனவே, இந்தப் படத்திற்கு யார் இசை அமைப்பாளர் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அனிருத் அல்லது ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைப்பாளராக இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X