twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த 'சூப்பர் ஸ்டார்' விஜய் தான்: வேந்தர் மூவிஸ் சிவா

    By Siva
    |

    சென்னை: ரஜினிகாந்திற்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என்று வேந்தர் மூவிஸ் டி. சிவா தெரிவித்துள்ளார்.

    ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தின் வினியோக உரிமையை வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளது. படத்தின் இசை உலக இசை தினமான கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

    பாடல்கள் சூப்பர் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

    48 மணிநேரத்தில் விற்பனை

    48 மணிநேரத்தில் விற்பனை

    தலைவா படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கிய 48 மணிநேரத்திற்குள் அது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விற்றுவிட்டதாக வேந்தர் மூவிஸின் டி. சிவா தெரிவித்துள்ளார்.

    அடுத்த சூப்பர் ஸ்டார்

    அடுத்த சூப்பர் ஸ்டார்

    ரஜினிகாந்துக்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்பது அனைவருக்கும் தெரியும் என்று சிவா கூறினார். அவர் மேலும் கூறகையில், ரஜினி போன்று விஜய்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

    4வது ஹிட்டா?

    4வது ஹிட்டா?

    காவலன், நண்பன் மற்றும் துப்பாக்கி ஆகிய 3 தொடர் ஹிட் படங்களை கொடுத்தார் விஜய். இந்நிலையில் தலைவாவும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    English summary
    According to Vendhar movies T. Siva, Vijay is the next superstar. Vijay has a fan base as big as Rajinikanth's and it is growing exponentially with every passing day, he added.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X