வரலாற்றுப் படத்தில் விஜய்? ராஜமௌலி, சசிகுமார் சந்திப்பின் பின்னணி?
சசிகுமார் ஒரு வரலாற்று படத்தை இயக்க உள்ளார்
Recommended Video

சென்னை: சசிகுமார் விஜய்யை வைத்து ஒரு வரலாற்று திரைப்படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அட்லி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் சசிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சசிகுமார் சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலியை சந்தித்திருந்தார். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நடிப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் ராஜமௌலியை சந்தித்தது ஒரு இயக்குனராக சில விஷயங்களை கேட்டறிய என்பது தெரிய வந்துள்ளது.
சசிகுமார் ஒரு வரலாற்று திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். வரலாற்று திரைப்படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் ராஜமௌலி என்பதால் அவரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார்.
இப்படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு மும்பு நடிகர் விஜய்யிடம் ஒரு வரலாற்று திரைப்படக் கதையை சொன்னபோது, அவர் மிகவும் ரசித்து நிச்சயம் பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது அதே கதையைத் தான் எடுக்கப்போகிறாரா அல்லது வேறு கதையா எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











