திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் வழிபாடு.. கோவிலில் நடந்த சத்ரு சம்ஹார யாகம்!

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் பூரண கும்ப மரியாதை அளித்து விஜய்யை வரவேற்றனர். அதிகாலை முதலே திருச்செந்தூரில் ரசிகர்கள், பொதுமக்கள் திரண்ட நிலையில், விஜய் கோவிலுக்கு வருகை தந்ததும் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக மாறியது.

திருச்செந்தூரில் விஜய்: தமிழ் நாட்டில் 234 தொகுதியிலும் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் இளைஞர்கள் ஆர்வமுடன் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் விஜய் அதிகாலை திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவரை திரிசுதந்திரர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். மேலும், கோவில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. முருகப்பெருமானை தரிசித்த விஜய்க்கு கோவில் நிர்வாகம் பாரம்பரிய மரியாதையுடன் வேல் வழங்கி கௌரவித்தது கவனம் ஈர்த்தது. ' ஆன்மிக அடையாளமாக கருதப்படும் வேல் வழங்கப்பட்ட சம்பவம், விஜயின் இந்த வருகைக்கு மேலும் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Vijay thiruchendur murugan temple

பூரண கும்பமரியாதை: விஜய் திருந்செந்தூருக்கு வந்திருக்கும் தகவல் பரவியதை அடுத்து விஜய்யை நேரில் காண ஏராளமான ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் "தளபதி தளபதி" என முழக்கமிட்டு உற்சாகம் காட்டினார்க. பாதுகாப்பு கருதி அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விஜய் கோவிலுக்கு வருகை தந்தது சாதாரண தரிசனம் மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது. அண்மையில் மக்கள் சந்திப்புகள், அரசியல் ஆலோசனைகள், கட்சி அமைப்பு வேலைகள் என தீவிரமாக செயல்பட்டு வரும் விஜய், இப்போது ஆன்மிக பயணத்திலும் கவனம் செலுத்தியது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே அரசியலில் களமிறங்கி தேர்தலை சந்தித்து இருக்கும் விஜய் பொதுமக்களுடன் நேரடியாக கலந்துகொள்வது, கோவில் தரிசனங்கள், சமூகச் செய்திகளை முன்வைப்பது என விஜய் வேறொரு பாணியில் நகர்கிறார் என ரசிகர்கள் கூறுகின்றனர். ஒருபுறம் ஆன்மிக விஜயம், மறுபுறம் அரசியல்... இவற்றின் நடுவே திருச்செந்தூரில் விஜய்க்கு கிடைத்த மக்கள் வரவேற்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X