Vijay - காதலுக்கு அர்த்தம் இதுதான்..விஜய் சொன்ன செம விஷயம்..ட்ரெண்டாகும் பேட்டி

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்; 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபடவிருக்கிறார் விஜய். அவருக்கு யார் யார் எல்லாம் திரைத்துறையிலிருந்து ஆதரவு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.

Vijay Old Interview Goes Trending on Social Media

GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடந்துவருகிறது. இப்படமானது டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையே விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறது விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்துவருகின்றனர்.

கடைசி படம்: முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று விஜய் அறிவித்திருக்கிறார். எனவே அவரது ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 உருவாகிறது. அதனை வெற்றிமாறன் இயக்குவார் தகவல்கள் அதிகம் பரவின. ஆனால் இப்போதோ, வெற்றிமாறன் அந்தப் படத்தை இயக்கமாட்டார்; தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம்தான் அந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். அப்படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

காதலுக்கு அர்த்தம் இதுதான்: விஜய் தற்போது அரசியலுக்கு சென்றுவிட்டார்; கடந்த சில வருடங்களாகவே கமர்ஷியல் படங்களில் நடித்துவந்தார். ஆனால் தன்னுடைய ஆரம்பகாலத்தில் காதல் படங்களில் கவனம் செலுத்தியவர் விஜய். காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ப்ரியமுடன், கண்ணுக்குள் நிலவு, ஷாஜகான், ப்ரியமானவளே, லவ் டுடே, பூவே உனக்காக என அவர் நடித்த காதல் படங்களின் லிஸ்ட் அதிகம்.

இந்நிலையில் காதலுக்கு விஜய் அர்த்தம் சொல்லும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "காதல் என்றால் புரிதல். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்வதற்கு பெயர்தான் காதல்" என்கிறார். இந்தப் பேட்டியை ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X