Vijay - வாழ்க்கைல அதை மட்டும் செய்யமாட்டேன் சிவா.. சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த வாக்கு என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். விரைவில் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத அந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. எப்படியாவது விஜய்யை வெல்ல வைக்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் சூளுரைத்திருக்கின்றனர்.

விஜய் டாப் ஹீரோவாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது ஒவ்வொரு படமும் அசால்ட்டாக 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைகிறது. இதற்கிடையே அவர் தனது மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார். கடந்த டிசம்பர் மாதம்கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நேராக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறும் காலம் தொலைவில் இல்லை என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

Vijay Old Interview Video Goes Trending on Social Media


தமிழக வெற்றி கழகம்: இந்தச் சூழலில் அவர் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அக்கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் ஜோராக தொடங்கிவிட்டன. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை; 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்று முழங்கியிருக்கிறார். இதனால் விஜய்யின் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது அவரது தொண்டர்களாக மாறியிருக்கிறார்கள்.

வெல்வாரா விஜய்?: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து இனி தமிழ்நாட்டின் அரசியல் போக்கு எப்படியாக இருக்கும் என்று விவாதங்கள் எழ ஆரம்பித்துவிட்டன. மேலும் தேர்தலில் அவர் தனித்து போட்டியிடுவாரா இல்லை கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வியை இப்போதே எழுப்பும் சிலர் விஜயகாந்த் கட்சி மாதிரி ஆரம்பத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து பிறகு சுவடில்லாமல் தமிழக வெற்றி கழகம் போய்விடுமோ என்றும் சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்.

வெல்ல வைப்போம் என உறுதி: மேற்கூறியபடி ஒருபக்கம் பேச்சு ஓடிக்கொண்டிருந்தாலும் கண்டிப்பாக விஜய்யை கோட்டைக்கு அனுப்புவோம் என்று சூளுரைத்திருக்கின்றனர் அவரது தொண்டர்கள். முக்கியமாக விஜயகாந்த் எப்படி மவுசாக இருந்தாரோ அதே மவுசை விஜய்க்கு வரவைத்து அந்த மவுசு இறங்காமல் இருக்க அனைத்து வகையிலும் பணியாற்றுவோம். விஜயகாந்த் போல் கண்டிப்பாக தமிழ்நாடு அரசியலில் ஒரு தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

கடைசி படம்: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததை அடுத்து இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை. ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். அநேகமாக அந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவதற்கு வாய்ப்பு அதிகம். சமீபத்தில்கூட விஜய்யை சந்தித்து வெற்றிமாறன் ஒருமணி நேரம் பேசியதாகவும்; விரைவில் இருவரும் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பழைய பேட்டி: இந்நிலையில் விஜய் அளித்திருக்கும் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தபோது விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட விஜய்யிடம், நீங்கள் இயக்குநர் ஆவீர்களா என்று எஸ்கே கேட்கிறார். அதற்கு பதிலளித்த விஜய், வாழ்க்கையில் எப்போதும் அதை மட்டும் செய்யவே மாட்டேன். ஏனெனில் அது டென்ஷன் மிகுந்த வேலை. அந்த மாதிரியான வேலை எப்போதும் எனக்கு செட் ஆகாது என்று கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X