Vijay on Jailer: “இது தலைவரோட சம்பவம் நெல்சா..” ஜெயிலரை பாராட்டிய விஜய்... செம்ம ரியாக்ஷன்!
சென்னை: ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நீண்ட நாட்களாக தரமான கம்பேக் கொடுக்க காத்திருந்த சூப்பர் ஸ்டாரும், ஜெயிலரில் மாஸ் சம்பவம் செய்துள்ளார்.
இந்தப் படம் குறித்து பலரும் விமர்சனங்கள் கூறி வரும் நிலையில், இயக்குநர் நெல்சனுக்கு விஜய்யிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளதாம்.

ஜெயிலர் படம் குறித்து விஜய் அனுப்பிய மெசேஜ்ஜால் இயக்குநர் நெல்சன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.
இது தலைவரோட சம்பவம் நெல்சா: ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜெயிலர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் கம்பேக் படம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். முழுக்க முழுக்க தலைவரின் மாஸ் சம்பவமாக ஜெயிலர் உருவாகியுள்ளது எனவும், ஆக்ஷன் போர்ஷன்ஸ் எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜெயிலர் வெளியான முதல் நாளே ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர். முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பல தரப்பினரும் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சனுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 'தலைவர் நிரந்தரம்' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி மஜா செய்தனர். இந்நிலையில், ஜெயிலர் படம் குறித்து தளபதி விஜய் இயக்குநர் நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பியது வைரலாகி வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த நெல்சன், மூன்றாவது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கினார். கடந்தாண்டு வெளியான பீஸ்ட் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்திருந்தாலும், விமர்சன ரீதியாக நெகட்டிவாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனால், விஜய்யையும் நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்தனர். இன்னொரு பக்கம் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மாஸ் பாடல்களில் நடிகர் விஜய்யை அட்டாக் செய்து லிரிக்ஸ் எழுதப்பட்டுள்ளதாகவும் சர்ச்சையானது.து தலைவரோட சம்பவம் நெல்

ஆனால், அது எல்லாம் சுத்த பொய் என்பதாக தற்போது விஜய்யின் மெசேஜ் நெல்சனுக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே பீஸ்ட் உருவாகும் முன்னர், ஜெயிலர் பட கதையை விஜய்யிடம் கூறியுள்ளார் நெல்சன். அதற்கு விஜய்யோ "இந்த கதை தலைவருக்கு தான் செம்ம மாஸ்ஸாக இருக்கும், அதனால் இதனை ரஜினி சாரிடம் சொல்லுங்க" என நெல்சனுக்கு அட்வைஸ் செய்திருந்தாராம். அதன்பின்னரே ஜெயிலர் கதையை ரஜினியிடம் கூறியுள்ளார் நெல்சன்.
இந்நிலையில் தற்போது நார்வே சென்றுள்ள விஜய், ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இன்னொரு தகவலின் படி அவர் ஜெயிலர் படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு நெல்சனை பாராட்டியுள்ளாராம். அதாவது "Congrats Nelson, Super Happy for you" என செல்போனில் மெசேஜ் தட்டி நெல்சனுக்கு வைப் கொடுத்துள்ளார் விஜய். இதனை இயக்குநர் நெல்சன் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினி - விஜய்யை வைத்து சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்காக சண்டையிட்டு வந்த ரசிகர்களுக்கு, இந்த மெசேஜ் ஷாக்கிங்காக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











