Vijay on Vijayakanth: "எனக்காகவே அந்தப் படத்தில் நடித்தார் விஜயகாந்த்..” நெகிழ்ச்சியில் உருகிய விஜய்
சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று.
இதனையடுத்து அவருக்கு ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தமான விஜயகாந்த், விஜய்யின் கேரியரில் மிகப் பெரிய மாற்றம் வர காரணமாக இருந்துள்ளார்.
அதுகுறித்து நடிகர் விஜய் பேசிய வீடியோவை விஜயகாந்த் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
விஜயகாந்த் குறித்து விஜய் நெகிழ்ச்சி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் முன்னணியில் இருக்கும் போது, புரட்சிக் கலைஞராக மாஸ் காட்டியவர் விஜயகாந்த். ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த், ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 1980, 90களில் விஜயகாந்தின் படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் தரமான ஓபனிங் கிடைத்தது.
தற்போது சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிவிட்ட கேப்டன், வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். அவரின் 70வது பிறந்தநாளான இன்று ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும் போலீஸ் கேரக்டர், துப்பறியும் படங்களில் அதிகமாக நடித்துள்ளார் விஜயகாந்த். அதேபோல், விஜயகாந்த்தை அதிக படங்களில் இயக்கியவர் என்ற பெருமை விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு உண்டு.
விஜயகாந்த் - எஸ்.ஏ சந்திரசேகர் கூட்டணியில் உருவான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்தக் கூட்டணி இணைந்தாலே அந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜயகாந்த் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனும் இன்றைய கோலிவுட் மாஸ் ஹீரோவுமான விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. விஜயகாந்த் - எஸ்.ஏ சந்திரசேகர் கூட்டணியில் உருவான பல படங்களில் கேப்டனின் சின்ன வயது கேரக்டரில் நடித்தவர் விஜய்.
அதேபோல், விஜய் சினிமாவில் அறிமுகமான புதிதில் அவரது 1993வளர்ச்சியில் விஜயகாந்தும் பெரிய பங்காற்றியுள்ளார். இதுகுறித்து தான் விஜய் இந்த வீடியோவில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, கிளாஸ் ஆடியன்ஸ் மாஸ் ஆடியன்ஸ் என இரண்டு தரப்பினர் இருக்கின்றனர். அவர்களில் மாஸ் ஆடியன்ஸ் ஒரு நடிகனை சிறந்த நடிகராக ஏற்றுக்கொள்வது ரொம்பவே முக்கியமானது. அன்னைக்கும் இன்னைக்கும் இதில் விஜயகாந்த் தான் மாஸ் நடிகர்.
அதனால் அவரை வைத்து எனது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய படத்தில், நான் தம்பியாக நடித்தேன். அப்போது விஜயகாந்த் சாரை பார்க்க வந்தவர்களிடம் நானும் அறிமுகமாக முடிந்தது. எனக்காகவே விஜயகாந்த் அந்தப் படத்தில் நடித்தார், அதுதான் 'செந்தூரபாண்டி' என விஜய் குறிப்பிட்டுள்ளார். 1993ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதுடன், சினிமாவில் விஜய்க்கும் அவர் எதிர்பார்த்த அறிமுகம் கொடுத்தது.
அதன்பின்னர் தான் விஜய் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இதனை மறக்காமல் விஜய் பேசியுள்ள ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் 70வது பிறந்தநாளான இன்று, விஜய்யின் இந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதனையடுத்து விஜயகாந்த் ரசிகர்களும் விஜய் பேசிய வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 1998ம் ஆண்டு விஜய் கொடுத்த ஒரு பேட்டியில் அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











