விஜய்யோட பலவீனமே இதுதான்.. அவரே ஒத்துக்கொண்டார் தெரியுமா?.. சங்கீதா பிரச்னைக்கும் இது காரணமோ?

சென்னை: விஜய்யும், சங்கீதாவும் விரைவில் சட்டப்பூர்வமாக பிரியவிருக்கிறார்கள். கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையும் விஜய் தனித்து சந்தித்துவிட்டார். அவர் என்ன மாதிரியான தாக்கத்தை அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை மே நான்காம் தேதி அனைவருமே தெரிந்துகொள்ளலாம். அன்றைய நாளை தவெகவினர் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

விஜய்க்கும், சங்கீதாவுக்கும் திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் நாளுக்கு நாள் பெரிதாகி பிரிவில் வந்து நிற்கிறது. சுமூகமாக பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்து சில வருடங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கையெழுத்திட்டு பிரிந்துவிட்டதாகவும்; இப்போது ஏன் அது வெளியில் வந்திருக்கிறது என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில்கூட தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Once Said Anger Is My Weakness Did It Lead to Rift with Sangeetha
Photo Credit:

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: சங்கீதாவுடன் விஜய் எப்படியாவது மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அவர்களோ பிரிவதில் உறுதியாக இருக்கிறார்கள். ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கு; ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக அன்றைய தினம் அவர்கள் சட்டப்பூர்வமாக பிரிந்துவிடுவார்கள் என்றுதான் பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. ஆனால் எப்படியாவது ஒரு மேஜிக் நடந்து அவர்கள் சேர்ந்துவிடமாட்டார்களா என ஆசையோடு இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

தேர்தலும் ஓவர்: இதற்கிடையே இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையும் தனித்து சந்தித்துவிட்டார் அவர். பரப்புரையும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி அவர் செய்யவில்லை. மொத்தமே பரப்புரையில் அவர் 50 மணி நேரத்துக்கும் குறைவாகவே பேசியிருப்பார். இருப்பினும் தைரியத்தோடு இருக்கும் அவர்; கண்டிப்பாக வாக்கு விழுக்காட்டில் விஜயகாந்த் வாங்கிய எட்டு விழுக்காட்டை தாண்டிவிடுவாரா என தெரியவில்லை. ஆனால் தவெகவினரோ இப்போதே உத்தேச அமைச்சரவை பட்டியலை வெளியிட தொடங்கி தனி உலகத்தில் வாழ்கிறார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் 20 வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றம் மூலம் விஜய் உதவி செய்தது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அப்போது அவரிடம் உங்களது பலம், பலவீனம் என்னவென ரசிகை ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய்யோ, 'என்னுடைய பலவீனம் என்றால் கோபம்தான். என்னுடைய பலம் எனது அம்மா, அப்பா' என்றார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களோ விஜய் உண்மையில் ஷார்ட் டெம்ப்பர் என்பது சில விஷயங்களில் உணர முடிந்தது.

சங்கீதா பிரச்னைக்கு இது காரணமா?: ஆனால் அவரே ஓபனாக நான் ஒரு கோபக்காரன் என்பதை உணர்த்தியிருக்கிறார். ஒருவேளை அந்த கோபமும், ஈகோவும்தான் சங்கீதாவுடனான பிரச்னை இவ்வளவு தூரம் வளர்வதற்கு காரணமாக அமைந்திருக்குமோ என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பிவருகிறார்கள். அதுமட்டுமின்றி கோபத்தை குறைத்து மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள் விஜய் அண்ணா என்றும் அட்வைஸ் செய்ய சோஷியல் மீடியாவில் தொடங்கியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X