என்ன பண்ணி வச்சுருக்கான்னு தெரியல.. மன உளைச்சலாயிட்டேன்.. லோகேஷ் குறித்து விஜய் பரபரப்பு பேச்சு!
சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகர் விஜய் பேசியது படு சுவாரசியமாக இருந்தது.
Recommended Video
மாநகரம் கைதி படங்களை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் மாஸ்டர். நடிகர் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமண், சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் விஜயுடன் நடித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

என்ன பண்ணியிருக்காரோ
நிகழ்ச்சியின் இறுதியாக பேசிய நடிகர் விஜய், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, மாநகரம் படத்த திரும்பி பார்க்க வச்சாரு.. கைதி படத்த திரும்ப திரும்ப பார்க்க வச்சாரு.. மாஸ்டர் படத்த என்ன பண்ண போறாருனுனு தெரியல.. உங்கள மாதிரிதான் எனக்கும் ஃபைனல் அவுட்புட் பார்க்க ஆர்வமாயிருக்கு என்றார்.

சொல்லட்டுமா
லோகேஷ் எனக்கு ஒரு குட்டி ஆச்சரியம்தான். பேங்க்ல வேலை பார்த்திருக்காரு.. அப்புறம் ஃபிரன்ட்ஸ் கூட சேர்ந்து ஷார்ட் பிலிம்லாம் எடுத்திருக்காரு, பெருசா எந்த டைரக்டருக்கிட்டேயும் வேலை பார்க்கல.. ஆனா அவனப் பத்தி ஒரு விஷயத்தை சொல்லனும்.. என்று கூறிய விஜய் சொல்லட்டுமா என கேட்க லோகேஷிடம் கேட்க வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டார்.

டேய் எந்த மாதிரிடா
ஆனால் சொல்லுவேன் என்று தொடர்ந்து பேசிய விஜய், ஷுட்டிங் ஆரம்பிச்சதும் ஃபர்ஸ்ட் ரெண்டு நாள் வந்தாரு.. கையில எந்த சீன் பேப்பரும் இல்ல டயலாக் பேப்பரும் இல்ல.. சார் நீங்க இந்த மாதிரி பேசுவீங்க.. அவரு அந்த மாதிரி சொல்வாரு.. அப்படிம்பாரு. நான் பெரிய மனஉளைச்சலுக்கு ஆளாகிட்டேன், டேய் எந்த மாதிரிடா? அடுத்த நாளு சீன் பேப்பர் வந்துடுச்சு..

கிண்டல் பண்றானோ
நானும் யோசிச்சேன் சீன் பேப்பரே கொடுக்கமாட்ரானே.. எப்படி இவனோட நாளைஞ்சு மாசத்த ஓட்றதுன்னு.. அப்புறம் டெய்லி வந்து சார் சீன் பேப்பர்ன்னு கொடுப்பான்.. நான் நினைப்பேன்.. என்ன கலாய்க்கிறானோன்னு.. கிண்டல் பண்றானோ.. ஓட்றானோன்னு என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து ஜாலியாக பேசினார்.

ஓவரா இருக்கு உட்காரு
மேலும் அவரு பிளான் மட்டும் பண்ணல மாஸ்டர் பிளான் பண்றாரு அந்த பாட்டுல வர்றா மாதிரி அதான் அவரோட வெற்றிக்கு காரணம் என்று லோகேஷ் கனகராஜை புகழ்ந்தார் நடிகர் விஜய். அப்போது லோகேஷ் கனகராஜ் எழுந்து நின்று நன்றி கூற, ரொம்ப ஓவரா இருக்கு உட்காரு என்று மொக்கை கொடுத்தார் நடிகர் விஜய்.


Click it and Unblock the Notifications











