புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்
சென்னை : மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் செம டிரெண்ட் ஆகி வருகிறது. ரசிகர்கள் இதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
கன்னட சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் புகழப்பட்ட புனித் ராஜ்குமார் 2021 ம் ஆண்டு அக்டோபர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் . ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்த அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

அஞ்சலி செலுத்திய ஹீரோக்கள்
புனித் ராஜ்குமாரின் உடல், அவரது பெற்றோர்கள் நினைவிடம் அமைந்துள்ள பெங்களூரு கன்டிவாரா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் பொதுமக்கள் பலர் இன்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்த விஷால், விஜய் சேதுபதி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் இதுவரை புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய்
இந்நிலையில் இன்று நடிகர் விஜய், புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தோளில் சிறிய பேக், சிவப்பு நிற சட்டை, சாதாரண பேண்ட் அணிந்து வந்த விஜய், புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் தீபாராதனை காட்டி வழிபட்டார். பிறகு அங்கு வைக்கப்பட்டுள்ள புனித் ராஜ்குமாரின் போட்டோவிற்கு பூத்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் இதை சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

முதல் முதலில் இருவரின் அறிமுகம்
மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது விஜய்யும், புனித் ராஜ்குமாரின் சந்தித்து கொண்டனர். புனித் ராஜ்குமார், ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அப்போது தான் முதல் முறையாக கலந்து கொண்டார். அதே விழாவில் மற்றொரு சிறப்பு விருந்தினராக விஜய்யும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் இருவரும் தங்களின் படங்கள் பற்றி வெகு நேரம் பேசிக் கொண்ட போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆனது.

என்ன திடீர் விசிட்
இந்நிலையில் தற்போது புனித் ராஜ்குமார் உயிரிழந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில் இன்று விஜய் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக விஜய் பெங்களூரு சென்றாரா, அல்லது வேறு காரணத்திற்காக சென்றவர் அப்படி புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்றாரா என தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











