விபத்தில் ரசிகர் மரணம்... நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்!
தன்னைச் சந்தித்துவிட்டுச் செல்லும்போது விபத்தில் பலியான ரசிகருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் நடிகர் விஜய்.
ரசிகர் மன்றங்களை எப்போதும் ஆக்டிவாக வைத்திருப்பதில் கவனமாக இருப்பவர் நடிகர் விஜய். அடிக்கடி அவர்களைச் சந்தித்து, நலத் திட்ட விழாக்கள் நடத்தி வருகிறார்.
அரசியல் பிரச்சினைகள் காரணமாக, கடந்த ஓராண்டாக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். கடந்த ஆண்டு பிறந்த நாள் கூட கொண்டாடவில்லை.

இந்த ஆண்டு அவர் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இதற்காக ரசிகர்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.
இருதினங்களுக்கு முன்னர் சேலம், நெல்லை மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் விஜய்யை சந்தித்தனர். இந்தச் சந்திப்பு முடிந்து வீடு திரும்பிய போது எதிர்பாராத விதமாக நெல்லையை சேர்ந்த ரசிகர் ஒருவர் இறந்துவிட்டார்.
விஷயம் கேள்விப்பட்ட விஜய், அந்த ரசிகரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


Click it and Unblock the Notifications











