ஆர்.பி.சௌத்ரி மறைவு.. நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜய்.. இடிஞ்சு போயிட்டாரு
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பி.சௌத்ரி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. நாளை அவருக்கான இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகரும், முதலமைச்சராக பதவியேற்கவிருப்பவருமான விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். விஜய்யை வைத்து சௌத்ரி ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. மலையாளத்தில் திரை பயணத்தை ஆரம்பித்து கோலிவுட்டில் தரமான படங்களை தயாரித்து ஆழமான தடத்தை பதித்தார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் படங்கள் என்றாலே குடும்பங்கள் தாராளமாக பார்க்கலாம் என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. அது உருவாக முழுக்க முழுக்க சௌத்ரியே காரணம். தன்னிடம் எந்த இயக்குநர் கதை சொன்னாலும்; அதில் திருத்தங்கள் இருந்தால் தயங்காமல் அதேநேரம் இயக்குநரின் மனம் சங்கடப்படாதபடி சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

100வது பட வேலைகள்: இதுவரை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் 99 திரைப்படங்களை தயாரித்திருக்கிறது. 100வது படத்தை பிரமாண்டமாக பெரிய ஹீரோவை வைத்து தயாரிக்கும் வேலைகளில் இறங்கியிருந்தார். அதற்காக விஜய்யிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஏற்கனவே அவரை வைத்து பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் என ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார். அந்த சென்ட்டிமென்ட் படியும், விஜய்க்கு இருக்கும் வியாபாரத்தை கருத்தில் கொண்டும் அந்த முயற்சிகளில் இறங்கியிருந்தார் அவ்ர்.
உயிரிழந்த சௌத்ரி: ஆனால் சில காரணங்களால் விஜய்யால் நடிக்க முடியவில்லை. இனியும் முடியாது. ஏனெனில் இனிமேல் விஜய் முதலமைச்சர். விஜய் வெளியேறியதை தொடர்ந்து சௌத்ரி மற்ற ஹீரோக்களிடமும் பேச்சுவார்த்தையில் இறங்கியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சென்றார். அப்போது சாலை விபத்து ஏற்பட்டது. அதில் அதிர்ச்சியடைந்த அவருக்கு மாரடைப்பு வந்ததன் காரணமாக உயிரிழக்கவும் செய்துவிட்டார்.
நாளை இறுதி சடங்குகள்: சௌத்ரியின் மரணம் தமிழ் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது உடல் இன்று சென்னையில் இருக்கும் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இப்போது திரைத்துறையினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது. தந்தை இறந்ததை நினைத்து நடிகர்கள் ஜீவாவும், ரமேஷும் உருக்குலைந்து போயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் மனித தன்மையற்ற சிலர் ஜீவா அழுத வீடியோவில் சென்று மோசமாக கமெண்ட்ஸ் செய்துவந்தார்கள்.
விஜய் அஞ்சலி: இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக நாளை பங்கேற்கவிருக்கும் விஜய் இன்று ஆர்.பி.சௌத்ரியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஒருபக்கம் முதலமைச்சராக போகும் ரேகை மறுபக்கம் தன்னை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் இந்த மாதிரியான நேரத்தில் தவறிவிட்டாரே என்ற சோக ரேகையும் முகத்தில் படிந்திருந்தன. எவ்வளவு உயரத்துக்கு போனாலும் தன்னை வளர்த்துவிட்டவரை மறக்காத விஜய்க்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
