அதெல்லாம் மிஸ்ஸே ஆகாது.. தளபதி 69 ஷூட்டிங் இந்த மாதத்தில் ஸ்டார்ட் ஆகுதா?.. தவெக மாநாடு எப்போ?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தை முடித்து விட்டு முழுநேர அரசியலில் நடிகர் விஜய் ஈடுபட உள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், தளபதி 69-வது படம் எந்த மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப் போகிறது உள்ளிட்ட தகவல்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளன.
நடிகர் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் போஸ்டர் அடித்து கோரிக்கை வைத்து வரும் அளவுக்கு தளபதி 69-வது படம் டிராப் ஆன தகவல்கள் ரசிகர்களை அப்செட் ஆக்கியது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் நடிகர் விஜய் 69-வது படத்தை முடித்து விட்டு தான் அரசியலுக்கு வருவார் என்றும் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஏகப்பட்ட பிறந்தநாள் ஏற்பாடுகளை ஒரு பக்கம் செய்து வரும் நிலையில் கோட் படத்தின் அப்டேட்களும் ரெடியாகி வருகின்றதாம்.
தளபதி 69 கன்ஃபார்ம்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது. அந்த படத்தை முடித்துவிட்டு தனது அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய். அதன் பின்னர் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
நவம்பர் மாதம்: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் தான் நடிகர் விஜய் தளபதி 69 படத்தில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். கமல்ஹாசன் படம் மிஸ் ஆனதால் விஜய் படத்தை வெறித்தனமாக உருவாக்கும் முயற்சியில் ப்ரீ புரொடக்ஷன் பணிகளையே எச். வினோத் செய்து வருவதாக கூறுகின்றனர். 6 மாதத்திற்குள் அந்த படத்தை முடித்து விட வேண்டும் என்றும் நடிகர் விஜய் டைம் லைன் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
தவெக மாநாடு எப்போ?: செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியான பின்னர் செப்டம்பர் 21ம் தேதி திருச்சியில் பிரம்மாண்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடிகர் விஜய் நடத்தப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளிலேயே தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











