வாடிவாசல் படத்துக்கு விஜய் வைத்த செக்.. வெற்றிமாறனுடன் ரகசிய சந்திப்பு.. அடுத்த சம்பவம் ரெடியா?

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்துக்கே ஏகப்பட்ட சிஜி வேலைகளை செய்ய லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சென்றிருக்கிறார் நடிகர் விஜய் என்கிற தகவல்களே ரசிகர்களை குதூகலிக்க வைத்த நிலையில், அடுத்து வெற்றிமாறன் உடன் விஜய் கூட்டணி வைக்கப் போவதாக இன்னொரு அசத்தல் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் மற்றும் ஷாருக்கான் என டாப் ஹீரோக்களை இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வெற்றிமாறன் காத்துக்கிடக்கிறார். அவரது முயற்சியின் ஒரு கட்டமாகத்தான் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை அறிவித்தார்.

Vijay plans to do a movie with Vetrimaran, before Vaadivaasal?

ஆனால், யார் கண் பட்டதோ என்னமோ தெரியவில்லை. இதுவரை வாடிவாசல் படம் ஆரம்பிக்கவே இல்லை. இந்நிலையில், அந்த படம் ஆரம்பம் ஆகுமா? என்கிற டவுட்டும் கிளம்பி உள்ளது.

விடுதலை 2 முடியப்போகுது: சூரி, விஜய்சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கிய வெற்றிமாறன் அந்த படத்தை 2 பாகங்களாக கொடுக்க முடிவு செய்து இரண்டாம் பாகத்தை விரைவில் முடிக்கப் போகிறாராம்.

விடுதலை 2 படம் முடிந்த பின்னராவது வாடிவாசல் ஆரம்பம் ஆகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சூர்யா மற்ற இயக்குநர்களுடன் கைகோர்த்து படம் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

வாடிவாசல் எப்போ ஆரம்பம்: வாடிவாசல் படத்துக்கு முன்பாக வணங்கான் படத்தில் நடித்து விடலாம் என நினைத்த சூர்யாவுக்கு அந்த படத்தின் பாதி ஷூட்டிங்கிலேயே படம் செட் ஆகாது என தெரிந்து கொண்டு அதிரடியாக அந்த படத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் வாடிவாசல் படத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்த்தால், வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிசியாகி விட்டார். உடனடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

கங்குவா படம் முடிந்தவுடன் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படம் முடிந்த பின்னர் தான் வாடிவாசல் ஆரம்பிக்கும் என்கின்றனர்.

Vijay plans to do a movie with Vetrimaran, before Vaadivaasal?

வெற்றிமாறனுடன் இணைகிறாரா விஜய்: இயக்குநர் வெற்றிமாறனுடன் தொடர்ந்து பல முறை நடிகர் விஜய்யின் அட்மினான ஜெகதிஷ் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு குறுகிய காலத்தில் எடுத்து முடித்தால், அடுத்ததாக விருது வாங்கக் கூடிய படமாக வெற்றிமாறன் படத்தில் நடிகர் விஜய் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அப்படி நடந்தால், வாடிவாசல் படம் மேலும், தாமதமாகுமா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X