மிடில் கிளாஸ், குழந்தைகள் மார்கெட்டை பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. உஷாரான விஜய்.. பக்கா பிளான்!
சென்னை: பீஸ்ட் படத்தின் தோல்வி காரணமாக அடுத்த படத்தை மிகவும் பார்த்து பார்த்து செய்ய இயக்குநருக்கு கட்டளை விடுத்துள்ளார் நடிகர் விஜய் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், மிடில் கிளாஸ், குழந்தைகள் மார்க்கெட்டை நடிகர் சிவகார்த்திகேயன் பிடித்து வரும் நிலையில், அந்த இடங்களிலும் ஸ்ட்ராங் படுத்த வேண்டும் என்பதற்காகவே தளபதி 66 படத்தில் பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
கடுமையான விமர்சனங்களை வரிசைப்படுத்தி இனி இதுபோல தனது படங்களுக்கு எந்தவொரு விமர்சனமும் வரக்கூடாது என்பதை இயக்குநருக்கு தெளிவாக கூறி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதுதான் கதையா
சாமானிய மக்களின் கஷ்டங்களை போக்க வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் போராடுவதும், அவருக்கு இருக்கும் ஒரு வித நோயை கண்டு கொள்ளாமல் மக்களுக்கு உழைப்பதும் தான் கதை என்கிற ஒரு டாக்கும் சமூக வலைதளங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. வம்சி சொன்ன இந்த வித்தியாசமான கதை பிடித்துப் போகவேத் தான் நடிகர் விஜய் தளபதி 66 படத்தை இயக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.

வம்சி படங்களில்
நாகார்ஜுனா, கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தில் வசதியான நபர் விபத்தின் காரணமாக முடங்கிப் போகும் சூழலில் சாமானிய மனிதனின் நட்பு அவரை எப்படி சந்தோஷப்படுத்துகிறது என்கிற கதையை சொல்லி இருப்பார். மகேஷ் பாபுவை வைத்து சமீபத்தில் வம்சி இயக்கிய மகரிஷி படத்தில் சாமானிய மனிதன் கார்ப்பரேட் முதலாளியை எதிர்த்து போராடி உயிரை விட, அந்த நண்பனுக்காக மகேஷ் பாபு போராடும் கதையாக அந்த படம் அமைந்திருந்தது.

குழந்தைகளை கவர
இந்நிலையில், மிடில் கிளாஸ் மக்களையும், குழந்தைகளை கவரும் விதத்தில் தளபதி 66 படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்வைத் வினோத் மற்றும் ஹர்ஷிதா கார்த்திக் என இரு குழந்தை நட்சத்திரங்களுக்கு தந்தையாக இந்த படத்தில் விஜய் நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. மேலும், தளபதி 66 படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மார்க்கெட் முக்கியம் பிகிலு
பீஸ்ட் படம் இந்தியளவில் ட்ரோல் மெட்டீரியலாக மாறிய நிலையில், கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் சிவகார்த்திகேயன் நடிகர் விஜய்யின் பழைய ரூட்டை பக்காவாக ஃபாலோ செய்து வெற்றி குவித்து வருவதை உணர்ந்து கொண்ட நடிகர் விஜய், இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்கள் இதுபோன்ற குடும்ப சென்டிமென்ட் கலந்த ஜாலியான படங்களை தான் ரசிக்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டு மீண்டும் அந்த மார்க்கெட்டை டார்கெட் செய்து கோல் போடும் முயற்சியில் இறங்கி உள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நம்பும்படியாக
கதைக்கு என்ன தேவையோ அதை நோக்கிய காட்சிகளை வைங்க என்றும் எக்ஸ்ட்ராவா எதையும் திணிக்க வேண்டாம், நம்பும்படியாக இருந்தால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படத்தை பார்த்து பாராட்டுறாங்க என தனது நிலைப்பாட்டை சொல்ல, அதற்கு ஏற்றவாறு வம்சி படத்தை இயக்கி வருகிறார் என்கின்றனர்.

ஒரு தடவை தான் தவறும்
படையப்பா படத்தில் சொல்வது போல ஒரு தடவை தான் வெற்றி தவறும், இனிமேல் மிஸ் ஆகாது என்கிற ஃபார்முலாவில் அடுத்தடுத்த படங்களின் இயக்குநர்களையும் அந்த இயக்குநர்கள் சொல்லும் கதையையும் முழுதாக ஆர்வத்துடன் கேட்டு, வொர்க்கவுட் ஆனால், மட்டுமே ஓகே சொல்லும் முடிவில் இருக்கிறாராம் நடிகர் விஜய்.


Click it and Unblock the Notifications











