சிம்பு தேவன் படத்திலும் இரண்டு விஜய்கள்!

By Shankar

கத்தி படத்துக்குப் பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்திலும் அவர் இரட்டை வேடமேற்கிறார்.

முன்னணி ஹீரோக்கள் இப்போதெல்லாம் இரட்டை வேடங்களில் நடிப்பதையே விரும்புகிறார்கள்.

விஜய்க்கு இரட்டை வேடங்களில் நடிப்பது மிகவும் பிடித்தமான விஷயம். இதற்கு முன்பும் பல படங்களில் அவர் இரட்டை வேடமேற்றுள்ளார்.

கத்தியில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இருவேறுபட்ட பாத்திரங்கள் என்பதால் இந்த இரு வேடங்களிலும் விஜய் சிறப்பாக நடித்தார்.

புதுப் படம்

புதுப் படம்

இந்தப் படத்துக்குப் பிறகு சிம்பு தேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

பிடி செல்வகுமார்

பிடி செல்வகுமார்

மேலும், நடிகை ஸ்ரீதேவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். பி.டி.செல்வக்குமார் இப்படத்தை மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கிறார்.

இரு வேடங்கள்

இரு வேடங்கள்

இந்நிலையில், படத்தை பற்றிய சுவாரஸ்மான செய்தி ஒன்று தற்போது வெளிவந்திருக்கிறது. ‘கத்தி' படத்தை தொடர்ந்து விஜய் இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். அப்பா வேடத்திற்கு ஜோடியாக ஸ்ரீதேவியும், மகன் வேடத்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கவிருக்கிறார்களாம்.

மாரீசன்

மாரீசன்

தற்போது இப்படத்திற்காக சென்னை ஈசிஆர் ரோட்டில் பிரம்மாண்ட அரண்மனை செட் ஒன்று போடப்பட்டு வருகிறதாம். மேலும், படத்திற்கு ‘மாரீசன்' என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மாரீசன் என்பது தனுஷ் படத்துக்காக சிம்புதேவன் தேர்வு செய்த தலைப்பாகும்.

அட்லி

அட்லி

இப்படம் முடிந்த கையோடு விஜய், அட்லி இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ‘விஜய் டிவி' மகேந்திரன், ஆடிட்டர் சண்முகம் இவர்களோடு இணைந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார்.

சசிகுமாருக்கு ஒரு படம்

சசிகுமாருக்கு ஒரு படம்

அதைத் தொடர்ந்து ‘சுப்ரமணியபுரம்' படத்தை இயக்கிய இயக்குனரும், நடிகருமான சசிகுமார் இயக்கும் முழு ஆக்ஷன் படமொன்றிலும் விஜய் நடிக்கவிருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X