அண்ணன் சீர் வந்துடுச்சு.. அண்ணி சங்கீதா இனி டீல் தான்.. விஜய்க்கு குறையாத சிங்கப் பெண்கள் மவுசு!

சென்னை: மு.க. ஸ்டாலின் என்ன 1000 ரூபாய் தருவது நான் மாசம் 2500 ரூபாய் தருகிறேன் என மகளிர் தின சிறப்புக் கூட்டத்தில் விஜய் ஒரே போடாக போட்டு சிங்கப் பெண்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக அள்ள விஜய் ஏகப்பட்ட லிஸ்ட்டுகளை போட்டு அடித்து நொறுக்கி விட்டார்.

மேலும், அண்ணன் சீராக திருமணமாகும் பெண்களுக்கு அண்ணன் சீராக பட்டுப்புடவையும் 1 சவரன் தங்க நகையும் வழங்கப்படும் என ஜெயலலிதா தாலிக்கு தங்கம் திட்டத்தை போல ஒரு அசத்தலான திட்டத்தை அறிவித்துள்ளார் விஜய்.

Vijay popularity not affecting after Sangeetha Divorce and Trisha open appearance with him too

விவாகரத்து சர்ச்சைக்குப் பிறகு மகளிர் தினத்தை பெண்கள் புறக்கணிப்பார்கள் என பலரும் எதிர்பார்த்த நிலையில், ஒட்டுமொத்த சிங்கப் பெண்களையும் கவர ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளார் விஜய்.

கரூர் இறப்புக்கு பிறகும்: கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக பலியான சோகம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. அதுதொடர்பான சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது. விஜய் நடத்தும் கூட்டங்களில் அதன் பிறகாவது மக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்ப்பார்கள் என்றும் தவெக இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்வார்கள் என எதிர்பார்த்தால், 4800 பேர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கூட கேப் கிடைத்தவுடன் பல ஆயிரம் இளைஞர்கள் புகுந்து கூட்டத்தை கலவரமாக மாற்றுகின்றனர். வாகனங்களில் வரும் இளைஞர்கள் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாக மாறினாலும் விஜய்யை காணவும் விஜய்க்கு ஆதரவு தரவும் மக்கள் தயாராகவே உள்ளனர்.

பொண்டாட்டியாக கூட வருவோம்: சங்கீதாவின் விவாகரத்து மனு குறித்த தகவல்கள் கசிந்த நிலையில், விஜய்க்கு எதிராக பெண்கள் ஆதரவு குறையும் என மற்ற கட்சியினர் கடுமையாக விமர்சித்த நிலையில், தவெகவின் தீவிர பெண் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகைகள் விஜய்க்கு பொண்டாட்டியாக கூட வருவோம் என்றும் மற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் எல்லாம் 2 பொண்டாட்டி வச்சிருக்கவில்லையா? என அதை நார்மலைஸ் செய்து வருகின்றனர்.

அண்ணன் சீர்.. அண்ணி டீல்: இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தவெக கூட்டத்தில் பங்கேற்ற விஜய்யை காண அதிகளவில் மகளிர் திரண்டு உற்சாக வரவேற்பை அளித்தனர். த்ரிஷாவுடன் திருமணத்தில் விஜய் பங்கேற்றதன் பின்னர், ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பின. சினிமா பிரபலங்களே பொதுவெளியில் விஜய்க்கு எதிரான கருத்துக்களை பேசத் தொடங்கிய நிலையில், அண்ணன் சீர் 1 சவரன் நகை என்றதும் இப்போது விற்கும் விலைவாசியில் இது போதும்டா சாமி என அண்ணி சங்கீதாவின் விவாகரத்து வழக்கை சிங்கப்பெண்கள் டீலில் விட்டுவிடுவார்கள் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X