Thalapathy 68: என்னாது தளபதி 68 பாடல் காட்சி லீக் ஆகிடுச்சா?.. சும்மா எல்லை மீறி போறாங்களே!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி, அஜ்மல் உள்ளிட்ட பலர் தளபதி 68 படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் சமீபத்தில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அந்த பாடல் காட்சியில் விஜய்யுடன் சேர்ந்து நடிகர் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடனம் ஆடியிருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் நெட்டிசன்கள் உருவாக்கி உள்ள ஏஐ புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தளபதி 68 படத்தின் பாடல் காட்சியே லீக் ஆகி விட்டதாக படக்குழுவுக்கே பகீரை கிளப்பி வருகின்றனர்.

Vijay, Prashanth, Prabhu Deva AI images dances for Thalapathy 68 photo goes trending

டாக் ஆஃப் தி டவுன்: ராஜமெளலி மகேஷ் பாபுவின் படத்துக்கு அதிகமாக ஏஐ தொழில்நுட்பத்தில் இன்வெஸ்ட் செய்யப் போவதாக கூறப்படும் நிலையில், போட்டோ மேஜிக்கில் ஏஐ வேறலெவல் வித்தைகளை காட்டி வருகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வித்தியாசமான லுக்கில் இருப்பது போல ஏஐ தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

தளபதி 68ல் பிரசாந்த்: டாப் ஸ்டார் பிராசந்த், மைக் மோகன், சினேகா, அஜ்மல் மற்றும் பிரபுதேவா என கசிந்துள்ள காஸ்டிங் தகவலே கலர்ஃபுல்லாக உள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெங்கட் பிரபு டச்சில் தளபதி 68 படம் உருவாகும் என்றும் மங்காத்தா போல ராவாக இருக்காது என்றும் கூறுகின்றனர். விஜய் படத்தில் இணைந்து பிரசாந்த் நடித்து வருவது உறுதி என சினிமா வட்டாரத்தில் பலரும் தகவல்களை கசியவிட்டு வருகின்றனர்.

லியோ ரிலீஸ் ஆனதும்: லியோ படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆனதும் தளபதி 68 படத்தின் பூஜை புகைப்படங்களையும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட வெயிட் செய்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

Vijay, Prashanth, Prabhu Deva AI images dances for Thalapathy 68 photo goes trending

மூவரும் இணைந்து நடனம்: விஜய், பிரசாந்த், பிரபுதேவா மூவரும் இணைந்து நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் நெட்டிசன்கள் உருவாக்கி உள்ள ஏஐ போட்டோ தற்போது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இன்னமும் பெட்டராக இருந்தால் சூப்பராக இருக்கும் என்கிற கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. ரியாலிட்டி இதை விட சூப்பராக இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் எகிற வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X