திட்டமிட்டே ரஜினிகாந்தை எள்ளி நகையாடினார் விஜய்.. ரங்கராஜ் பாண்டே என்ன இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: காக்கா - கழுகுன்னு சொல்லிட்டு விஜய் ஒரு சின்ன கேப் விட்டதே ரஜினிகாந்தை எள்ளி நகையாடத்தான் என ரங்கராஜ் பாண்டே தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய காக்கா - கழுகு கதைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே லியோ வெற்றி விழாவில் விஜய் பேசியதாக தெரிவித்த ரங்கராஜ் பாண்டே நடிகர் விஜய்யின் அரசியல் ஆசை மற்றும் அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

Vijay pre planed for that Crow and Eagle story at Leo Success Meet - Rangaraj Pandey

நடிகர் விஜய் 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என சொல்லியிருந்தாலும் அவர் இப்போதைக்கு அரசியல் வருவது அவருக்கு நல்லது அல்ல என்றும் கூறியுள்ளார்.

ஸ்டாலின் ஸ்ட்ராங்கா இருக்காரு: தளபதி ஸ்டாலின் மற்றும் திமுக கட்சி தமிழ்நாட்டில் வலுவாக உள்ள நிலையில், 2026ம் ஆண்டு நடிகர் விஜய் அரசியலில் களம் கண்டு வெற்றி பெறலாம் என நினைப்பது எல்லாம் வேலைக்காகாத ஒன்று எனக் கூறியுள்ளார். திமுகவில் ஸ்டாலின் மற்றும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஸ்ட்ராங்காக உள்ளனர். அதன் பின்னர் பாஜக, சீமான் என பலர் அரசியலில் களம் கண்டுள்ளனர். இதையெல்லாம் தாண்டி விஜய் என்ன மாதிரியான அரசியல் செய்யப் போகிறார் என்பதையும் பார்க்க வேண்டும் என பேசியுள்ளார்.

Vijay pre planed for that Crow and Eagle story at Leo Success Meet - Rangaraj Pandey

எள்ளி நகையாடிய விஜய்: அதே போல காக்கா - கழுகு கதை மனதளவில் தயார் செய்து கொண்டு வந்து ரஜினிகாந்துக்காகவே விஜய் பேசியுள்ளார் என்பது அவர் காட்டில் யானை இருக்கு, முயல் இருக்கு மான் இருக்கு மயில் இருக்கு என சொல்லிக் கொண்டே வந்து காக்கா இருக்கு கழுகு இருக்கு என சொல்லி விட்டு தான் எதற்காக சொல்கிறேன் என்பதை ரசிகர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என பிரேக் விட்டு சிரித்து விட்டு ஒரு ரவுண்ட் வந்து அதன் பின்னர் மீண்டும் மைக்கை பிடித்து விஜய் பேசியது ரஜினியை எள்ளி நகையாடத்தான் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

2031க்கு மேல்: நடிகர் விஜய் 3 ஆண்டுகள் அரசியலில் ஆழம் பார்த்து விட்டு செட்டாகவில்லை என்றால் மீண்டும் சினிமாவுக்குள் வந்து விடும் திட்டத்தை வைத்துக் கொண்டு தான் இறங்கப் போகிறார். நடிகர் விஜய் இப்போது வருவதை விட 2031க்கு மேல் வந்தால் இன்னமும் ஆடுகளம் சூடுபிடிக்கும் என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X