நண்பர் அஜித்.. ஒரே வார்த்தையில் ரசிகர்கள் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!

சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய "நண்பர் அஜித்" என்ற வார்த்தை டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

என் நண்பர் தல Ajith...Thalapthy Vijay Speech |Missing Fans| Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படம் அடுத்த மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

மாஸ்டர் படத்தின் டிரைலர் வரும் மார்ச் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பேச்சு

விஜய் பேச்சு

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்ன பேசுவார்? என்று கேட்பதற்கே பலரும் ஆவலோடு காத்திருந்தனர். மெர்சல், சர்கார், பிகில் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து, மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிலும் நெகட்டிவிட்டியை தள்ளி வைக்கணும் உள்ளிட்ட பலவற்றை விஜய் பேசியுள்ளார்.

நண்பர் அஜித்

நண்பர் அஜித்

அரசியல் குறித்த பேச்சுக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, விஜய் - அஜித் ரசிகர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு, நண்பர் அஜித் என்ற வார்த்தை மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. நெகட்டிவிட்டி, ட்விட்டர் சண்டைகளை விட்டு விட்டு, தளபதி ரசிகர்களும், தல ரசிகர்களும் நண்பர் அஜித் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அதிகரித்துள்ள பாசிட்டிவிட்டி

அதிகரித்துள்ள பாசிட்டிவிட்டி

நெகட்டிவிட்டியை இக்னேர் பண்ண வேண்டும் என தொடர்ந்து சொல்லி வரும் நடிகர் விஜய், இன்று நடைபெற்ற மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிலும், பல இடங்களில் அதையே ஆழமாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்தி உள்ளார். நதியை ஒரு இடத்துல பூக்கள் தூவியும், ஒரு இடத்துல கல் எறிந்தும் செல்வார்கள். ஆனால், நதி அதையெல்லாம் கண்டுக்காம போய்கிட்டே இருக்கும் என்றும் குட்டி கதை சொல்லி அசத்தியுள்ளார்.

திருந்துவார்களா

திருந்துவார்களா

ஒருத்தர் மேல இருக்குற விஸ்வாசத்த காட்ட இன்னொருத்தரை அசிங்கப்படுத்தாதீங்கன்னு தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்துல வசனத்தின் மூலமாக தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணி இருப்பார். அதே போல, தற்போது, நண்பர் அஜித் எனக் கூறி, அஜித்துடன் இருக்கும் தனது நட்பை மீண்டும் விஜய் நிரூபித்துள்ளார். இனிமேலாவது ரசிகர்கள் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் மீம்களை போட்டு ட்விட்டர் சண்டையை நடத்தாமல் இருந்தால் நல்லது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X