அரசியல் என்ட்ரி.. பக்கா ஸ்கெட்ச்.. GOAT படக்குழுவுக்கு விஜய் போட்டிருக்கும் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் இதுவா?

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சியை இப்போது ஆரம்பித்தாலும் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கட்சி போட்டியிடாது என்றும்; 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் GOAT படத்தில் நடித்துவரும் விஜய்; தனது அரசியல் என்ட்ரியை மனதில் வைத்து படக்குழுவுக்கு ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்திருந்திக்கிறார் அவர். எனவே லியோ படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணையவிருக்கிறார்கள் என அட்டகாசமான அறிவிப்பு வெளியானது. அஜித்துக்கு எப்படி ஒரு மெகா ஹிட்டை வெங்கட் கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் தரமான சம்பவத்தை செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

Vijay Put The Condition to GOAT Movie Crew

GOAT: இந்தப் படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அதிகம் புழக்கத்தில் இருக்கும் GOAT வார்த்தையை படத்தின் பெயராக வைத்தது ரொம்பவே புதுமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கி முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

போஸ்டர்கள்: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு GOAT படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்தப் போஸ்டர்களில் விஜய் படு யங்காக இருந்தார். மேலும் இதில் விஜய் டபுள் ஆக்‌ஷன் என்றும் அப்பா கேரக்டர் மற்றும் மகன் கேரக்டரை செய்கிறார் என்றும் தெரிகிறது. அப்பா விஜய்க்கு நடக்கும் துரோகத்தை டைம் ட்ராவலில் சென்று முறியடிப்பதுதான் படத்துடைய ஒன்லைன் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அப்பா விஜய் கமாண்டோ ரோல் செய்திருக்கலாம் என்று போஸ்டரை பார்க்கும்போது தெரிகிறது.

நிறுத்தப்பட்ட ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்தது. பக்ரீத் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டு அசுரத்தனமாக உழைத்து வருவதாக கூறப்பட்டது. அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை இலங்கையில் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் இளையராஜாவின் மகளும், வெங்கட் பிரபுவின் சகோதரியுமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதனால் GOAT படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தொடங்கிய ஷூட்டிங்: தற்போது தனது சகோதரியின் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டிருக்கும் வெங்கட் பிரபு மீண்டும் ஷூட்டிங்கை தொடங்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்கும் வகையில் பக்காவாக பிளான் போட்டு வேலை செய்துவருகிறார் வெங்கட் பிரபு. இதனால் விஜய்யும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் என்ட்ரி: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியல் பணியில் ஈடுபடபோவதாகவும் அறிவித்திருக்கிறார். எனவே GOAT படத்தையும், அடுத்த படத்தையும் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு நோக்கியிருக்கின்றனர். இந்நிலையில் GOAT படக்குழுவுக்கு விஜய் புதிய கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.

என்ன கண்டிஷன்: அதாவது GOAT படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தாராம் வெங்கட் பிரபு. ஆனால் அங்கு ஷூட்டிங்கிற்காக சென்றால் தமிழ்நாட்டில் கடும் கண்டனங்களை சந்திக்க நேரிடும்; அரசியல் வாழ்க்கைக்கும் பின்னடைவாக அமையலாம் என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறியதாகவும்; அதன் காரணமாக இலங்கையில் எந்தக் காரணம் கொண்டும் ஷூட்டிங்கை வைத்துவிடாதீர்கள் என்று வெங்கட் பிரபு டீமுக்கு கண்டிஷனை விஜய் வைத்ததாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X