TVK Vijay: விஜய் ரசிகைகளை நசுக்கி எடுத்த ரசிகர்கள்.. திருச்சியில் நடந்த திக் திக் சம்பவம்.. வீடியோ
திருச்சி: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் ஏப்ரல் இரண்டாம் தேதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு திருச்சியில் பிரச்சாரம் செய்தார். விஜய் திருச்சிக்கு வருகிறார் என்ற தகவல் தெரிந்து கொண்டு ரசிகர்கள், ரசிகைகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் ஏராளமானோர் விஜய் பிரச்சாரம் நடத்திய மரக்கடை பகுதியில் கூடியிருந்தனர்.
நடிகர் விஜய் 12 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கினாலும் காலையிலிருந்து விஜய் ரசிகர்கள் அங்கு கூட தொடங்கி விட்டனர். விஜய் சுமார் 12 மணி அளவில் தான் பிரச்சாரத்தை தொடங்கியதால் நீண்ட நேரம் காத்திருந்த, வெயிலில் நின்று கொண்டிருந்த ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் சோர்வாகி போனார்கள். மேலும் நேரம் ஆக ஆக அந்த பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமானது.

ரசிகைகளை நசுக்கிய ரசிகர்கள்: இது தொடர்பான பல வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் விஜய்யை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ரசிகைகள் பலரையும் அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ரசிகர்கள் நசுக்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரு இளம் பெண் வெயிலின் தாக்கத்தாலும் பின்னால் இருந்து ரசிகர்கள் நசுக்கு வந்தாலும் தாங்க முடியாமல் மிகவும் அவதிக்கு உள்ளாவதை பார்க்க முடிகிறது. மேலும் அவர் முடியவில்லை என்று அலறுகிறார். பார்ப்பதற்கே அச்ச உணர்வை ஏற்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆபத்தான முயற்சி: இதைப் பார்த்த பலரும் ஏற்கனவே விஜயை பார்க்கும் ஆவலில் சென்ற ரசிகர்கள் ரசிகைகள் தமிழக வெற்றிக் கட்சியினர் உள்ளிட்டோர் கரூர் துயரச் சம்பவத்தில் கொத்துக்கொத்தாக பலியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்படி இருக்கையில் விஜயை பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் தொடர்ந்து ஆபத்தான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.

காவல்துறை அதிகாரிக்கு கால் முறிவு: இந்த பிரசாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரியின் கால் மீது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனா சென்ற கார் ஏறி இறங்கியதில் காவல்துறை அதிகாரியின் கால் முறிந்தது. வலியில் அலறி துடித்த காவல்துறை அதிகாரியை சக காவல்துறை அதிகாரிகளும் தவெகவைச் சேர்ந்த தொண்டர்களும் தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications