Vijay: "புதிய மாற்றம் தேவை..” விஜய்க்கு சூப்பர் ஸ்டார் மனைவி வாழ்த்து... அங்கேயும் தளபதி தான் மாஸா?

சென்னை: விஜய் அரசியலுக்கு வரவிருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்கவுள்ள விஜய்க்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டோலிவுட்டில் இளம் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் ராம் சரணின் மனைவி உபாசனா விஜய்க்கு அல்டிமேட்டாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு வாழ்த்து சொன்ன உபாசனா: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோட், ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அரசியலில் களமிறங்கும் விஜய், ஏற்கனவே கமிட்டான ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். அதன்படி தளபதி 69 தான் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Vijay: Ram Charans wife congratulates Vijay on his political entry

அதன் பின்னர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மூலம் முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார் விஜய். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த விஜய், அரசியல் தான் என வேட்கை, இனி அதில் மட்டுமே கவனம் செலுத்தவிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது எனவும் கூறியிருந்தார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து விஜய்க்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அதேநேரம் விஜய்க்கு அரசியல் பற்றியெல்லாம் என்ன தெரியும் எனவும், சினிமாவில் சம்பாதித்த பணத்தை காப்பாற்ற கட்சி தொடங்கியுள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அதுகுறித்து கவலைப்படாத விஜய் அடுத்தடுத்து தனது அரசியல் பயணம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் மனைவி கருத்து தெரிவித்துள்ளார். "அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள விஜய்க்கு வாழ்த்து, சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் விஜய் எடுத்துள்ள இந்த முடிவு மிகப் பெரிய விஷயம். அரசியலில் சாதித்த மாநில முதலமைச்சர்கள் பலர் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். தமிழ்நாட்டு மக்களுக்கு தற்போது புதிதாக ஒரு மாற்றம் தேவை" என கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகை கடந்து தெலுங்கில் இருந்தும் உச்ச நட்சத்திரத்தின் மனைவி விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் விஜய்க்கு அவரது மனைவி வாழ்த்துக் கூறினாரா எனவும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் பான் இந்தியா ஹீரோவாக வலம் வரும் ராம் சரண், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X