ஹைதராபாத் சிறையில் இளையதளபதி விஜய்
சென்னை: ஹைதராபாத் சிறையில் விஜய் என்று தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா?. அது போலி சிறை, முருகதாஸ் படப்பிடிப்புக்காக போட்டப்பட்ட செட்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் தீரன் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. கொல்கத்தாவில் ஆக்ஷன் காட்சியையும், சென்னையில் பிரமாண்டமாக ஒரு பாடல் காட்சியையும் படமாக்கினர்.
இதையடுத்து மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைராதாபாத் சென்றுவிட்டது.

ராமோஜிராவ் பிலிம் சிட்டி
தீரன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறது.

ராஜமுந்திரி
படத்தில் உள்ள சிறை காட்சிகளை ராஜமுந்திரியில் இருக்கும் சிறைச்சாலையில் படமாக்க திட்டமிட்டனர். ஆனால் தெலுங்கானா பிரச்சனையால் ராஜமுந்திரி சிறையில் ஷூட்டிங் நடத்தமுடியவில்லையாம்.

செட்
ராஜமுந்திரி சிறைக்கு செல்ல முடியாததால் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலேயே சிறைச்சாலை போன்று செட் அமைத்து காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.

கும்முன்னு வில்லன்
விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஜிம்முக்கு போய் கும்முன்னு இருக்கும் டோட்டா ராய் சவுத்ரி என்ற பெங்காலி நடிகர் வில்லனாக நடிக்கிறார்.

கொலவெறி அனிருத்
படத்திற்கு அனிருத் தான் இசை அமைக்கிறார். விஜய்க்கும் ஒரு கொலவெறி டியூன் போடுவாரா அனிருத் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











