இனி தான் தமிழகத்திற்கு நல்லகாலம்..விசிலடித்து அலப்பறை.. வாழ்த்துக்களால் திணறும் விஜய்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் விஜய்க்கு நடிகர்கள், பிரபலங்கள் என பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விஜய்யின் நீலாங்கரை வீட்டை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்,ரசிகர்கள் திரண்டதால், அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகம் 110 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். தூத்துக்குடியில் போட்டியில் தவெக சார்பில் போட்டியிட்ட விஜயின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத் கீதா ஜீவனை தோற்கடித்துள்ளார். இப்படி தொடர்ந்து பல தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஷால் ட்வீட்: நடிகர் விஷால் தனது எக்ஸ் தளபக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இன்று முக்கிய நாள். ஆட்சி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் பல எதிர்பாராத திருப்பங்களும் நிகழ்ந்துள்ளன. இப்போது, நமது தமிழக ஆளுநரின் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும் என்று பார்ப்போம். இன்னும் சில மணி நேரங்களில்... வரும் நாட்களில் அவர் முழு வீச்சில் செயல்படுவதை நாம் காணவிருக்கிறோம். சரி, அவருடைய பெயர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர். களத்தில் இறங்குவோம். இறுதி முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நல்ல காலம்: அதே போல விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீமான் வெளியிட்டுள்ள வீடியோவில் விசில் அடித்து, தவெகாவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதே போல பாடகர் க்ரிஷ் வெளியிட்டுள்ள வீடியோவில்,நேத்து வந்த பய, சின்ன பையன் அரசியலை பற்றி என்ன தெரியும், அணில் கூட்டம் என என்னென்னமோ சொன்னார்கள். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என பல விஷயத்தை சொன்னார்கள். ஆனால், இன்னைக்கு என்ன ஆச்சு மாத்தீங்களா... இனிமேல் தான் தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்து இருக்கு. தமிழக மக்கள் இன்று சரித்திரம் படைத்து இருக்கிறீர்கள். மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு என பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications