விஜய் வெறும் நடிகர் அல்ல சிறந்த சர்வதேச நடிகர்: வைரல் புகைப்படம் #IARAAward
Recommended Video

சென்னை: மெர்சல் படத்திற்காக சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ விருது லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள்(IARA) என்ற அமைப்பு சர்வதேச அளவில் கலைஞர்களை கவுரவித்து வருகின்றது. நாடகம், சினிமா, இசை, தொலைக்காட்சி ஆகிய துறைகளில் மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
விஜய்
மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகர், சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் விஜய்யின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த சர்வதேச நடிகருக்கான விருது விஜய்க்கு கிடைத்துள்ளது. லண்டனில் நடந்த விழாவில் விஜய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
விருது
விஜய் கோட் சூட் போட்டு ஐஏஆர்ஏ விருதை கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
பெருமை
விஜய்க்கு சர்வதேச அளவில் விருது கிடைத்துள்ளதை நினைத்து அவரின் ரசிகர்கள் பெருமைப்பட்டுள்ளனர்.
தளபதி
விஜய் ரசிகர்கள் தங்களின் தளபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











