Thalapathy 68 - தளபதி 68... விஜய்யே சிபாரிசு செய்த நடிகர் இவரா?.. ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸா

சென்னை: Thalapathy 68 Update (தளபதி 68 அப்டேட்) தளபதி 68ல் ஒரு நடிகர் நடிக்க விஜய்யே சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. அந்த தகவல் விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லியோ ரிலீஸை அடுத்து தளபதி 68 பட பணிகள் மும்முரமடைந்துள்ளன. படத்தின் பூஜை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து படக்குழு அடுத்த ஷெட்யூலுக்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

Vijay Recommended VTV Ganesh in Thalapathy 68 Movie

படத்தில் யார் யார்?: தளபதி 68ல் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி அஜ்மல், மோகன், ஜெயராம் உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கிறார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி 68 பூஜையில் அவர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் தவிர்த்து பிரேம் ஜி அமரன், வைபவ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வில்லன் மோகன்: படத்தின் வில்லனாக மோகன் நடிக்கிறார். 80களில் பிரபலமான ஹீரோவாக வலம் வந்த அவர் தற்போது வில்லன் அவதாரம் எடுத்திருப்பதால் அவரது ஸ்க்ரீன் பிரசென்ஸை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். இந்தக் கதாபாத்திரத்தில் முதலில் அரவிந்த் சாமிதான் வெங்கட் பிரபுவின் சாய்ஸாக இருந்தார் என்று ஒரு தகவல் உலாவியது குறிப்பிடத்தக்கது.

என்ன கதை?: படத்தின் கதை குறித்து இப்போதே பலரும் தங்களது யூகங்களை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். அதன்படி படமானது டைம் டிராவலை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது என்றும்; இல்லை இல்லை அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் எமோஷனல்தான் கதை என்றும் கூறுகிறார்கள். எந்த மாதிரியாக இருந்தாலும் வெங்கட் பிரபு ஜாலியாகத்தான் அந்தப் படத்தை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

விஜய்யின் சிபாரிசு: இந்நிலையில் தளபதி 68 படத்தில் விடிவி கணேஷ் நடிக்க விஜய்யே சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. அதாவது விடிவி கணேஷ் தற்போது தளபதி 68ல் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க வெங்கட் பிரபு பிளானில் இருந்ததாகவும்; இல்லை இந்த கேரக்டரில் விடிவி கணேஷ் நடித்தால் சிறப்பாக இருக்கும் என விஜய் சொன்னதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தகவலை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருக்கின்றனர். விஜய் ரெக்கமெண்ட் செய்யும் அளவுக்கு விடிவி கணேஷ் அவ்வளவு க்ளோஸா எனவும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். விஜய்யும், விடிவி கணேஷும் ஏற்கனவே பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X