அனேகன் படத்திற்கு தனுஷை பரிந்துரைத்த விஜய்
சென்னை: அனேகன் படத்தில் தனுஷை ஹீரோவாக நடிக்க வைக்க பரிந்துரை செய்தது விஜய் தான் என இயக்குனர் கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கே.வி. ஆனந்த் தனுஷ், புதுமுகம் அமிரா தஸ்துர், கார்த்திக் உள்ளிட்டோரை வைத்து எடுத்துள்ள காதலும், ஆக்ஷனும் கலந்த படம் அனேகன். படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆனந்த் படம் பற்றி கூறுகையில்,

மாற்றான்
மாற்றான் படத்தை முடித்த பிறகு பல தயாரிப்பாளர்கள் என்னை அணுகி விஜய்யை வைத்து படம் பண்ணுமாறு கூறினார்கள்.

ஒரு வரி
ஒரு வரியில் கதை சொல்வது எனக்கு பிடிக்காது. முழு கதையையும் தெரிவித்தால் தான் திருப்தி. அனேகன் திரைக்கதையை தயார் செய்ய எனக்கு 4 மாதங்கள் ஆகின.

விஜய்
திரைக்கதையை தயார் செய்துவிட்டு விஜய்யை அணுகி என் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அதற்குள் அவர் ஜில்லா, கத்தி ஆகிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்.

காத்திருப்பு
விஜய்க்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவரை வைத்து படம் எடுக்க நான் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

தனுஷ்
வேறு யாரை ஹீரோவாக போடலாம் என்று நானும், விஜய்யும் பேசுகையில் அவர் தான் தனுஷின் பெயரை பரிந்துரைத்தார். அதன் பிறகே தனுஷை நடிக்க வைத்தேன் என்றார் ஆனந்த்.


Click it and Unblock the Notifications











