»   »  என்னது அட்லீக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கச் சொன்னாரா விஜய்?

என்னது அட்லீக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கச் சொன்னாரா விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 61 படத்தை இயக்கவிருக்கும் அட்லீக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்குமாறு இளைய தளபதி தயாரிப்பாளரிடம் தெரிவித்ததாக கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய், அட்லீ இணையும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

Vijay recommends Rs. 15 crore salary for Atlee?

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் அட்லீக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்குமாறு தேனாண்டாள் பிலிம்ஸிடம் கூறியதாக கோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது.

ராஜா ராணி, தெறி என வெறும் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லீக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர்களுக்கு அளிக்கும் சம்பளத்தை கொடுக்குமாறு கூறியுள்ளாராம் விஜய்.

இது உண்மை என்றால் 3வது படத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்ற பெருமையை பெறுவார் அட்லீ.

English summary
Buzz is that Vijay has asked Vijay 61 producer to give Rs. 15 crore salary to director Atlee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil