'தல' ரசிகரை தன் படத்திற்கு பரிந்துரைத்த விஜய்
சென்னை: நான் 'தல' அஜீத் குமார் ரசிகன்டா என்று கூறும் பரோட்டா சூரியை தனது ஜில்லா படத்தில் எடுக்க பரிந்துரை செய்துள்ளார் விஜய்.
துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய், காஜல் அகர்வால் ஜோடி சேரும் படம் ஜில்லா. இதை நேசன் இயக்குகிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது.
படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தில் விஜயுடன் முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கிறார். படத்தில் விஜய் தம்பியாக மகத் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் பூர்ணிமா பாக்யராஜ்.

வேலாயுதத்தில் விஜய்யுடன் கலக்கிய சூரி
வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார் பரோட்டா சூரி. அவர்கள் காம்பினேஷன் நன்றாக ஒர்க்கவுட் ஆனது. விஜயால் அவரும், கிராம மக்களும் படும்பாட்டை அவர் கூறுவதே தனி அழகு தான்.

'தல' ரசிகன் டா
நான் ஒரு 'தல' ரசிகன் டா என்று பெருமையுடன் கூறி வருகிறார் பரோட்டா சூரி. மேலும் அஜீத்துடன் நடிக்கவும் அவருக்கு ஆசை உள்ளது.

ஜில்லாவில் சூரி இருக்கட்டுமே...
'தல' ரசிகரான சூரியை தனது ஜில்லா படத்தில் நடிக்க வைக்குமாறு விஜய்யே பரிந்துரை செய்துள்ளார். அவரது பரிந்துரையின் பேரில் தான் சூரியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











