இப்படிலாம் கையை ஆட்டி பேசக்கூடாது.. முதலமைச்சர் விஜய்யை திருத்திய ஆளுநர்.. மேடையில் என்ன நடந்தது?

சென்னை: நடிகராகவும், சில வருடங்களே ஆன கட்சியின் தலைவராகவும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று; தேர்தலுக்கு முன்பு திமுகவின் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக இன்று பதவியேற்றிருக்கிறார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் தங்களுக்கான பதவியை ஏற்றுக்கொண்டார்கள். தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் பதவியேற்கும்போது நடந்த ஒரு விஷயம் சோஷியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 108 தொகுதிகளில் வென்றது. பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை மற்ற கட்சிகளிடம் கேட்டது. அதன்படி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீக் கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டே தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்திருக்கின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் நாளாக இன்று அமைந்தது.

Vijay Recreates Baahubali Style Gesture During Oath Ceremony Viral Video Sparks Debate
Photo Credit:

களைகட்டிய ஏற்பாடுகள்: தாங்கள் உழைத்த உழைப்புக்கும், வைத்த எதிர்பார்ப்புக்கும் முழு பலன் கிடைக்கப்போவதை கொண்டாடுவதற்கு தவெகவினர் தயாராக இருந்தார்கள். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சந்தோஷ பூரிப்புடன் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்தனர். எல்லோரும் எதிர்பார்த்தபடியே நடிகை திரிஷாவும் தன் அம்மாவுடன் வந்திருந்தார். மேலும் விஜய்யின் ரசிகர்கள், தொண்டர்கள் என நேரு அரங்கமே அதிர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

Also Read
முதலமைச்சரான பிறகு விஜய் பேச்சு.. அவகாசம் கொடுங்கனு கேட்டிருக்காரு.. என்ன செய்யப்போகிறார்?
முதலமைச்சரான பிறகு விஜய் பேச்சு.. அவகாசம் கொடுங்கனு கேட்டிருக்காரு.. என்ன செய்யப்போகிறார்?

ஸ்மார்ட் முதலமைச்சர்: விஜய் இன்று அவ்வளவு ஸ்மார்ட்டாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளே வரும்போது வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டை அணிந்து வந்திருந்தார். உள்ளே வந்ததும் கருப்பு நிற கோட் போட்டு ரிச் லுக்கில் காட்சியளிக்க; இத்தனை வருடங்கள் கறை வேஷ்டிகளால் நிறைந்திருந்த முதலமைச்சரின் மேடை; பல வருடங்கள் கழித்து இப்போதுதான் பேண்ட், சட்டைகள் அலங்கரித்ததாக பூரிப்படைந்தார்கள் இப்போதைய மாடர்ன் தலைமுறையினர்.

சி.ஜோசப் விஜய் எனும் நான்: எல்லோரும் எதிர்பார்த்த் அந்த நொடி வந்தது. விஜய் சிம்ப்பிளாக வந்து, 'சி. ஜோசப் விஜய் எனும் நான்' என கூறுகையில் அனைவருமே ஆர்ப்பரித்தார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர் கண்கள் கலங்கி கையெடுத்து கும்பிட்டு கண்கள் கலங்கினார். அதேபோல் தாய் ஷோபாவும் ரொம்பவே எமோஷனலாக இருந்தார். தாங்கள் எதிர்பார்த்த அந்த வார்த்தைகள் கேட்டுவிட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் கொண்டாடினார்கள். முதலமைச்சரான விஜய், 'வீடுகளுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண்கள் படை, போதை பொருள் ஒழிப்பு படை' ஆகிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கிளம்பிய விவாதம்: சூழல் இப்படி இருக்க விஜய் பதவியேற்றபோது நடந்த ஒரு விஷயம் சோஷியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அதாவது முதலில் பேசிய விஜய், சி.ஜோசப் விஜய் என்னும் நான் என ஆரம்பித்து பேசினார். தனது பேச்சின் இறுதியில், 'உறுதியளிக்கிறேன்' என்று சொல்கையில் கைகளை தூக்கி பாகுபலி சீனை ரீ க்ரியேட் செய்திருந்தார். அது விஜய் ரசிகர்களிடையே மேற்கொண்டு பட்டாசை கொளுத்தி போட்டது.

விஜய் அவ்வாறு செய்ததை கவனித்த ஆளுநரோ, உறுதி மொழி அச்சிடப்பட்டிருக்கும் காகிதத்தை காண்பித்து. இதில் இருப்பதை மட்டும் படியுங்கள் என்பது மாதிரி ஏதோ கூற; அருகில் இருந்த அதிகாரியும் அதே தொனியில் விளக்கமளித்தார். பிறகு கைகளை எதுவும் தூக்காமல் அந்த உறுதி மொழியை பார்த்து வாசித்துவிட்டு சென்றார். இதை பார்த்த எதிர்க்கட்சியினரோ, பதவியேற்பு விழா மேடையை ஸ்க்ரீனாக நினைத்துக்கொண்டார் போல. மரபுடைய ஒரு பதவியை ஏற்கும்போது இப்படி சினிமாத்தனம் செய்யலாமா என்று கேள்விகள் எழுப்பிவருகிறார்கள்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X