Vijay - மெகா ஹிட் கொடுத்த இயக்குநருக்கே இந்த நிலையா?. அட்லீஸ்ட் அவரை பார்த்திருக்கலாமே விஜய்

சென்னை: Vijay (விஜய்) தனக்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குநரை சந்திப்பதற்கே விஜய் நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. விஜய் அவ்வாறு செய்திருக்கவே கூடாது என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

விஜய் இப்போது வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருகிறார். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி க்ளப்பில் இடம்பிடித்துவிடுகின்றனர். சமீபத்தில் நடித்த வாரிசு படம் 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துவரும் லியோ படத்தின் பட்ஜெட்டே 300 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல் சமீபமாக பரவிவருகிறது.

Vijay refused to met Thulladha Manamum Thullum director Ezhil

இப்போது கமர்ஷியல் கிங்; ஆரம்பத்தில்: விஜய் இப்போது கமர்சியல் கிங்காக ராஜபாட்டை நடத்திவந்தாலும் ஆரம்பத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படங்கள், காதல் படங்களில் நடிப்பதற்கு அதீத கவனம் செலுத்தியவர். அந்த ஜானரில் அவர் நடித்த படங்களும் ஹிட்டாகி அவருக்கு கை கொடுத்தன. அப்போது போடப்பட்ட விதைதான் விஜய் கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும் இப்போதும் அவரது படங்களை குடும்பத்தோடு பார்ப்பதற்கும், பெண்கள் பார்ப்பதற்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துவருகிறது.

துள்ளாத மனமும் துள்ளும்: அப்படி அவர் நடித்த படங்களில் முக்கியமான படம் துள்ளாத மனமும் துள்ளும். இயக்குநர் எழில் அந்தப் படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார். விஜய், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் 1999ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. முக்கியமாக விஜய்யின் கேரியரில் தி பெஸ்ட் படங்கள் என்ற லிஸ்ட்டை எடுத்தால் அதில் துள்ளாத மனமும் துள்ளும் நிச்சய்ம் இடம்பெறும்.

குட்டியாக கலக்கிய விஜய்: துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் வடிவேலுதான் ஹீரோவாக நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகிவிட விஜய் உள்ளே வந்தார். குட்டி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவருக்கு அந்தப் படம் நன்றாகவே தீனி போட்டது.

சாந்தமான நடிப்பு, அளவான அழகு, கேஷுவல் லுக் விஜய் வேறு பரிணாமத்தில் தோன்றி அசத்தியிருந்தார். குறிப்பாக தனது தாய் இறந்ததை யாருக்கும் தெரியாமல் தன்னுள் புதைத்து அழுதது, க்ளைமேக்ஸில் காவல் துறையிடம் அடி வாங்கி கலங்கி நிற்பது என விஜய்யின் நடிப்பை இப்போது பார்த்தாலும் பலரது கண்கள் கலங்கும்.

மறைந்துபோன எழில்: துள்ளாத மனமும் துள்ளும் படம் விஜய்க்கும் எழிலுக்கும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்துக்கு பிறகு எழில் இயக்கிய படங்களும் ஹிட்டாகின. ஆனால் திடீரென அவரது கிராஃப் சரிய தொடங்கியது. பின்னர், தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆக எழில் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். இப்போது அவரது இயக்கத்தில் ஆயிரம் ஜென்மங்கள், ஜகஜால கில்லாடி ஆகிய படங்கள் உருவாகியிருக்கின்றன.

Vijay refused to met Thulladha Manamum Thullum director Ezhil

எழிலை சந்திக்க மறுத்த விஜய்?: இந்நிலையில் விஜய்க்காக எழில் ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். அதை விஜய்யிடம் கூறுவதற்கு பல மாதங்கள் முயற்சி செய்துவருகிறாராம். ஆனால் எழிலை சந்திப்பதற்குக்கூட விஜய் நேரம் ஒதுக்கவில்லையாம். இது எழிலை ரொம்பவே அப்செட்டாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தகவலை கேள்விப்பட்ட பலர், எழில் கதையில் நடிக்க விஜய் ஒதுக்கொள்கிறாரோ இல்லையோ தனது கேரியரில் மெகா ஹிட் கொடுத்த ஒரு இயக்குநரை அட்லீஸ்ட் சிறிது நேரம் சந்திக்கவாவது செய்திருக்கலாம் என கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X