Vijay: லியோ ப்ரோமோஷனுக்காக லோகேஷ் கொடுத்த ஐடியா... ரோலக்ஸ் ஸ்டைலில் மிரட்டிய விஜய்!
சென்னை: லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.
லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாக இருப்பதால், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இப்போதே தொடங்கிவிட்டது.
இந்நிலையில், லியோ படத்தின் ப்ரோமோஷனுக்காக லோகேஷ் கொடுத்த ஐடியாவால் விஜய் காண்டாகிவிட்டார் என சொல்லப்படுகிறது.

லோகேஷுக்கு ஷாக்கிங் கொடுத்த விஜய்:மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி, லியோ என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் செட் போடப்பட்டு லியோ ஷூட்டிங் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
அதனால், தியேட்டர் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டதாம். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என லோகேஷ் இயக்கிய படங்கள் அனைத்தும் வசூலில் சக்கைப்போடு போட்டுள்ளன. அதனால், லியோ படத்தின் ரைட்ஸை வாங்குவதற்கு கடும் போட்டி காணப்படுகிறதாம். சமீபத்தில் இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை 60 முதல் 70 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை என ப்ரீ ரிலீஸில் மட்டுமே லியோ படம் 150 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், விஜய்யை வைத்து ஒரு ப்ரோமோஷன் செய்துவிடலாம் என லோகேஷ் பிளான் செய்ததாக தெரிகிறது. மேலும், இதனை அவரே நேரடியாக விஜய்யிடம் கூறியுள்ளார். ஆனால், அவரோ அதற்கு நோ சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்தலாம் என லோகேஷ் கூறினாராம். ஆனால், விஜய் அதற்கும் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. லியோ ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுப்பது உட்பட எந்த ஐடியாவும் விஜய்க்கு இல்லையாம். அதனால் தான் லோகேஷின் ஐடியாவை ரிஜக்ட் செய்ததோடு அவருக்கும் ரோலக்ஸ் ஸ்டைலில் ஜாலியாக மிரட்டியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











