Thalapathy 69: கோபத்தில் பொங்கிய சமந்தா.. விஜய்யின் 69வது படத்தில் இருந்து கழட்டிவிட்ட படக்குழு?
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் யாரும் வாங்காத அளவுக்கு சம்பளம் வாங்ககூடிய நடிகர் என்றால் அது நடிகர் விஜய்தான். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடியில் இருந்து ரூபாய் 250 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் என பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் கூறிவருகின்றனர். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து தனது 69வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.
தி கோட் படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்பு முடிவடைந்துவிடதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில் விஜய் தனது ரசிகர் மன்றமாக செயல் பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கத்தினை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி அரசியலில் களமிறங்கியுள்ளார். மேலும் தான் ஏற்கன்வே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்து கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் தி கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் விஜய் சில காலம் ஓய்வு எடுத்துவிட்டு, தனது 69 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த படத்தின் இயக்குநராக ஹெச். வினோத் இருப்பார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அந்த படத்தில் அரசியல் கதைக்களமாக இருக்கவேண்டும் என ஹெச். வினோத்திடம் கூறி அதற்காகவே இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
இன்ஸ்டா போஸ்ட்: மேலும் படத்தில் சமந்தா நடிக்கவுள்ளார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இது தொடர்பாக வேறு தகவல்கள் உலா வருகின்றது. அதாவது, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசித்தால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குணமடையும் என தனக்கு தனது மருத்துவர் கூறியது மட்டும் இல்லாமல் மாற்று மருந்து கொடுத்ததாகவும், பல கோடி ரூபாய் செலவு செய்து நான் கற்றுக் கொண்டதை மக்களுக்கு இலவசமாக சொல்லித் தருகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார்.
எதிர்ப்பு: சமந்தாவின் இந்த பதிவிற்கு எதிர்த்து மருத்துவர் ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் சமந்தா தவறான மருந்தை மக்களுக்கு பரிந்துரைக்கின்றார். குறிப்பாக அவர் பரிந்துரைக்கும் மருந்தினை அமெரிக்க ஆஸ்துமா கழகமே தடை செய்த மருத்துவமுறையையும் பரிந்துரைத்துள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட சமந்தா அதற்கு கோபப்பட இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றது.
சமந்தாவுக்கு நோ: சமந்தா மாற்று மருந்துகளை பரிந்துரைப்பதற்கு ஒரு பெரிய விளம்பர டீலிங் இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் பேச்சுகள் இணையத்தில் செய்திகள் உலா வரத்தொடங்கியது. சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருவதால் விஜய் படத்தில் சமந்தாவுக்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்து கொள்ளலாம் என விஜய் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படக்குழு தரப்பில் இருந்து நயன்தாரா அல்லது காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடத்த யோசித்து வருவதாக கூறப்படுகின்றது. சமந்தா விஜய்யுடன் கத்தி, தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











