Andhagan first single: பிரஷாந்துக்கு நண்பன் விஜய் செய்யும் உதவி.. இதாண்டா நட்பு!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள அந்தகன் திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் முதல் பாடலை தளபதி விஜய் நாளை வெளியிட உள்ளார். கோட் படத்தில் பிரசாந்த் நடித்ததை அடுத்து இருவரும் நல்ல நண்பர்களாக மாறியதால், நண்பனுக்காக விஜய் இந்த உதவியை செய்ய உள்ளார்.

90 காலகட்டத்தில் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இன்று சினிமாவில் டாக் ஹீரோவாக இருக்கும் விஜய், அஜித் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதிக்க தடுமாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் பிரசாந்த் அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படத்தில் நடித்தார்.

Vijay prashanth Andhagan

பல ஹிட் படங்கள்: நடிகர் பிரசாந்த் நடித்த கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, வின்னர், ஜீன்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். இவர் கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அடிக்கடி கோர்ட் கேஸ் என அலைந்துக் கொண்டிருந்த பிரசாந்தால் சினிமா மீது கவனம் செலுத்த முடியாமல் போனதால், அப்போது வெளியான படங்கள் தோல்வியைத் தழுவின.

அந்தகன்: இதையடுத்து , நீண்ட நாட்களுக்கு பிறகு அந்தகன் படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட அந்தாதூண் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த அந்தகன் படம். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து படத்திற்கான போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த வாரம் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

முதல் சிங்கிள்: அந்தகன் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது. இந்த பாடலை தளபதி விஜய் நாளை வெளியிட உள்ளார். விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகியோரின் குரலில் உருவாகி உள்ள இந்த பாடல், கேட்போரை அதிரவைக்கும் ஒரு ஹிட் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாடலை பிரபுதேவா வடிவமைத்துள்ள நிலையில், சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். ஒரு நட்சத்திர பட்டாளமே ஒன்று சேர்ந்து ஒரு சிங்கள் பாடலை அமைத்துள்ளனர்.

கம்பேக் படமாக அமையும்: இந்த படத்தில், பிரசாந்த் ஒரு பார்வையற்ற பியானோ கலைஞரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டார் மூவிஸ் தயாரிப்பில், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக், ஊர்வசி, யோகி பாபு, மனோ பாலா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார். பூவையார் உள்ளிட்ட நட்சத்திரக் பட்டாளம் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நடிகர் பிரசாந்திற்கு ஒரு கம்பேக் கொடுக்கும் படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X