Pathaan Trailer: பட்டாசாய் வெடிக்கும் பதான் ட்ரெய்லர்.. ஷாருக்கானுக்காக விஜய் செய்த சம்பவம்!

சென்னை: ஷாருக்கானின் பதான் தமிழ் ட்ரெய்லரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாரிசு ஃபீவரில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், பதான் ட்ரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் படத்தை இயக்கிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள பதான் படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பதான் பட்டாசு

பதான் பட்டாசு

தீபாவளிக்கு வெடிக்க வேண்டிய பதான் பட்டாசு வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு வெடிக்க உள்ளது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள பதான் படத்தின் அதிரடி ட்ரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டிங்கை திணறடித்துள்ளது. தீபிகா படுகோன் ஷாருக்கானுக்கு இணையாக சண்டை போடும் காட்சிகள் மற்றும் ஜான் ஆபிரகாமின் வில்லத்தனம் வெறித்தனம்.

விஜய் வெளியீடு

விஜய் வெளியீடு

நடிகர் விஜய் தனது படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசர், ட்ரெய்லர்களை மட்டுமே ட்விட்டரில் ட்வீட் போட்டு வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் பதான் தமிழ் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். ஜவான் படத்தில் விஜய்யின் கேமியோ இருக்கும் என எதிர்பார்த்து வரும் நிலையில், ஷாருக்கானின் பதான் ட்ரெய்லரை விஜய் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண் ரிலீஸ்

ராம்சரண் ரிலீஸ்

அதே போல பதான் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை ஆர்ஆர்ஆர் பட நாயகன் ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்தியாவில் ப்ரமோஷன் செய்ய ஷாருக்கான் இன்னும் வரவில்லையே என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகர்களை வைத்து பதான் ட்ரெய்லர் வெளியீட்டு சம்பவத்தை ஷாருக்கான் செய்துள்ளார்.

டாம் க்ரூஸ் படம் பார்த்தது போல

டாம் க்ரூஸ் படம் பார்த்தது போல

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்தை பார்த்தது போல பதான் ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியும் சரவெடியாக உள்ளது. ஹெலிகாப்டர் சண்டை மற்றும் ஹ்யூமன் ஜெட் ஃபைட் காட்சிகள் எல்லாமே வேறலெவலில் உள்ளன. பாலிவுட் கடந்த ஆண்டு சந்தித்த சரிவை நிச்சயம் ஷாருக்கான் மீட்டெடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

பதான் படத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஷாருக்கான் செயல்படுகின்றார் என்றும் காவி பிகினி சர்ச்சைக்கு எதிராக ஷாருக்கானின் உருவ பொம்மைகள் எல்லாம் எரிக்கப்பட்டு வந்த நிலையில், ட்ரெய்லர் முடிவில் ஜெய்ஹிந்த் எனும் வசனத்தால் அந்த சர்ச்சைக்கு ஷாருக்கான் முடிவு கட்டி உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X