கத்தி படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடிய பாடல்.. லண்டனில் படமாகிறது!
கத்தி படத்துக்காக அனிருத் இசையில் நடிகர் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார். இதனை லண்டனின் எழில் மிகு பகுதிகளில் படமாக்குகின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய்-சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘கத்தி' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.

செல்பிபுள்ள
பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் அனிருத் இசையில் விஜய் ஒரு பாட்டு பாடியுள்ளார். ‘செல்பிபுள்ள' என்று தொடங்கும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

எதிர்ப்பார்ப்பு
இதுவரை விஜய் பாடிய பாடல்களைவிட இந்த பாடல் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். இதனால், இப்பாடலை பிரம்மாண்டமாக படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

லண்டனில்
இதற்காக லண்டனை தேர்வு செய்துள்ள படக்குழு, அங்குள்ள முக்கிய இடங்களில் இப்பாடலை படமாக்க உள்ளார்களாம். இதில் விஜய்-சமந்தா இருவரும் பங்கேற்று நடிக்கவுள்ளனர்.

தீபாவளிக்கு
படத்துக்கு நிலவும் எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளாமல் தீபாவளிக்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் ஆடியோ வெளியீட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











