விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஜனநாயகன் படத்தில் நடந்த ட்விஸ்ட்?.. என்ன ஆனது தெரியுமா?
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதமே ரிலீஸாக வேண்டியது. ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக படமானது ரிலீஸாகவில்லை. இப்போது விஜய் முதலமைச்சராகிவிட்டார். எனவே விரைவில் படம் ரிலீஸாகும் என தெரிகிறது.
அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய் ஜனநாயகன் படத்தோடு சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அந்தப் படத்தை தரமாக கொடுக்க நினைத்த அவர் ஹெச்.வினோத்தை இயக்குநராக டிக் அடித்தார். விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கிறது. ஜனவரி மாதமே ரிலீஸாக வேண்டியிருந்தது.

படத்துக்கு முட்டுக்கட்டை: ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் தர மறுத்துவிட்டதால் படம்ஜனவரியில் ரிலீஸாகவில்லை. எப்படியாவது அறிவித்த தேதியில் ரிலீஸ் செய்துவிட பட தயாரிப்பு நிறுவனம் முயன்று நீதிமன்றத்துக்கு சென்றது. ஆனால் அந்த வழக்கு உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்று மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கே வந்தது. இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்று நொந்துகொண்டார்கள் தளபதி ரசிகர்களும், பட தயாரிப்பு நிறுவனத்தினரும்.
மறு தணிக்கைக்கு படம்: இனிமேலும் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான விஷயங்கள் நடக்காது என்பதை புரிந்துகொண்டு வழக்கை வாபஸ் பெற்ற நிறுவனம; படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியது. அப்போதும் அதிகாரிகள் தொடர்ந்து இழுத்தடிப்பதாக தகவல்கள் வந்தன. இது ஒருபக்கம் இருக்க; தமிழ்நாடு முதலமைச்சராகவும் மாறிவிட்டார் விஜய். எனவே இனிமேல் படம் ரிலீஸாவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கருதப்படுகிறது. கூடிய விரைவில் படம் வெளியாகலாம் என தெரிகிறது.
முதலமைச்சர் விஜய் நடிக்கும்: தேர்தலுக்கு முன்பே விஜய் ரசிகர்கள், 'தேர்தலில் விஜய் வென்று முதலமைச்சரான பிறகு ஜனநாயகன் டைட்டில் கார்டில் முதலமைச்சர் விஜய் நடிக்கும்' என போடுவார்கள் என்று ரொம்பவே உறுதியாக சொன்னார்கள். அவர்கள் அப்படி சொல்லும்போது பலரும் சிரித்தார்கள். ஆனால் அவர்கள் சொன்னபடியே விஜய் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிவிட்டாஅர். இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
என்ன தகவல்?: அதாவது ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டில், 'முதலமைச்சர் விஜய் நடிக்கும்' என போடும் பிளானில் கேவிஎன் நிறுவனம் இருந்ததாம். அதுதான் ரசிகர்களின் விருப்பம் என்பதாலும், விஜய்யின் கடைசி படம் இதுவென்பதாலும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தில் தீவிரமாக தயாரிப்பாளர் இருந்தாராம். ஆனால் விஜய்யோ தயாரிப்பு தரப்பை தொடர்புகொண்டு, 'முதலமைச்சர்' என டைட்டில் கார்டில் போட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக வலைப்பேச்சு டீம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
