ஷங்கருக்காக டேட்ஸை பத்திரப்படுத்தியுள்ள விஜய்
சென்னை: விஜய் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
சொந்த படங்கள் எடுத்து வந்த ஷங்கர் முதல் முறையாக இந்தி படமான 3 இடியட்ஸை தமிழில் ரீமேக் செய்தார். நண்பன் என்ற பெயரில் ரீமேக்கான படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் விஜய் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

ஜில்லா
விஜய் நேசன் இயக்கத்தில் ஜில்லா படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அடுத்தது முருகதாஸ்
ஜில்லா படத்தை முடித்த பிறகு விஜய் மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.

ஷங்கர்
முருகதாஸ் படத்தை முடித்த பிறகு விஜய் ஷங்கரின் படத்தில் நடிக்கிறார். ஷங்கர் ஐ படத்தை முடித்த பிறகு விஜய் படத்தை துவங்குவார் என்று கூறப்படுகிறது.

மெகா பட்ஜெட் படம்
ஷங்கர் விஜய்யை வைத்து மெகா பட்ஜெட்டில் படத்தை எடுக்க உள்ளாராம். இதனால் விஜய், முருகதாஸ் படத்தை தவிர வேறு யாருக்கும் டேட்ஸ் கொடுக்கவில்லையாம்.

மொத்தமாக டேட்ஸ்
விஜய் ஷங்கருக்கு மொத்தமாக டேட்ஸை வாரி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











