Leo Update - அண்ணன் வரார் பாரு வழிய விடு.. சென்னை வந்த விஜய்.. வேகமெடுக்குமா லியோ இறுதிக்கட்ட பணிகள்
சென்னை: Vijay (விஜய்) அமெரிக்கா சென்ற விஜய் இன்று சென்னை திரும்பியிருக்கிறார். இதனையடுத்து லியோவின் இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்விக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது கட்டாயம் தேவைப்படுகிறது. தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஆடியோ ரிலீஸ் எங்கே?: படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது நடக்கும் என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. அதன்படி முதலில் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியானது. ஆனால் வெளிநாட்டில் நடத்தினால் தமிழ் ரசிகர்களிடம் நெகட்டிவ் தாட் எழுந்துவிடும் என படக்குழு எண்ணுவதாகவும் அதன் காரணமாக செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
க்ளிம்ப்ஸ்: இதற்கிடையே லியோ படத்திலிருந்து சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திரம் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் ஜூலை மாதமும், ஆகஸ்ட் மாதமும் வெளியாகின. பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் கண்டிப்பாக லியோவிலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனி அடிக்கடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த அப்டேட்: லியோ படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் இந்த வாரத்தில் ரிலீஸ் ஆகும் என்றும்; படத்தின் ட்ரெய்லர் ஆடியோ வெளியீட்டுக்கு முன்னதாகவே வெளியிடப்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் புதிய தகவல் ஒன்று நேற்று வெளியானது. இந்தச் சூழலில் படத்தின் டப்பிங் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்று தெரியாமல் இருந்தது.
சென்னை ரிட்டர்ன்: விஜய்யோ தனது 68ஆவது படம் தொடர்பான பணிகளுக்காக வெங்கட் பிரபுவுடன் அமெரிக்கா சென்றார். இந்நிலையில் அவர் இன்று சென்னை திரும்பியிருக்கிறார். ஊதா நிற சட்டை அணிந்தபடி படு கேஷுவலாக வந்திறங்கினார் விஜய். எனவே லியோ டப்பிங் வேலைகளை விரைவில் விஜய் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











