கத்தியில் பிரஸ் மீட் காட்சியை ஒரே டேக்கில் நடித்த விஜய்
சென்னை: கத்தி படத்தில் வந்த பிரஸ் மீட் காட்சியை விஜய் ஒரே டேக்கில் நடித்ததாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கத்தி படத்தை விஜய்யும் சரி, அதை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸும் சரி அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அத்தனை பிரச்சனைகளை சந்தித்து படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். படமும் அவர்கள் எதிர்பார்த்தது போன்றே ஹிட்டாகியுள்ளது.
இந்நிலையில் கத்தி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி முருகதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அனல் அரசு
கத்தி படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு கிளாப் தட்டி துவக்கி வைத்தார்.
இரவு
முதல் நாள் படப்பிடிப்பில் நைட் எஃபெக்ட் காட்சிகளை படமாக்கினோம். யாருமே படத்தை நைட் எஃபெக்டோடு துவங்க மாட்டார்கள்.
விஜய்
பிரஸ் மீட் காட்சியை படமாக்க 2 மணிநேரம் ஆனது. விஜய் சார் ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தார்.

பிரபலம்
படத்தின் இறுதியில் வந்த பிரஸ் மீட் காட்சியில் விஜய் ஊழல்கள் பற்றியும், விவசாயிகளின் நிலைமை பற்றியும் பேசியிருந்தது மிகவும் பிரபலம் ஆனது.


Click it and Unblock the Notifications











