விஜய் வேளாங்கண்ணி பயணம் ரத்து.. சர்ச்சுக்குள் முட்டி மோதி நுழைந்த தொண்டர்களால் பரபரப்பு!

சென்னை: தவெக தலைவர் நடிகருமான விஜய் திருச்செந்தூர், ஷீரடிக்கு சென்று வந்த நிலையில், அடுத்ததாக அவர் வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது. இது தெரியா ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சர்ச்சுக்குள் புகுந்து டிவிகே, டிவிகே என முழக்கமிட்டதால் திருப்பலி 30 நிமிடங்கள் தாமதமானது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் இளைஞர்கள் திரளாக திரண்டு வந்து வாக்களித்ததால், இந்த தேர்தலில் 85 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை மே 4ந் தேதி வரும் திங்கட்கிழமை எண்ண இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

Vijay TVK Velankanni Church

திருச்செந்தூர்: அந்த வகையில் விஜய் ஏப்ரல் 28ந் தேதி திருச்செந்தூர் திருக்கோயிலில் அதிகாலை 5 மணி அளவில் சாமி தரிசனம் செய்தார். பட்டி வேஷ்டி சட்டையில் வந்திருந்த விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டு பாரம்பரிய மரியாதையுடன் வேல் வழங்கப்பட்டது. கோவிலில் விஜய் 'சத்ரு சம்ஹார யாகம்' செய்தாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விஜய், தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா உள்ள ஷீரடியில் இருக்கும் சாய்பாபா கோயிலுக்கு சென்று, சாய் பாபாவின் பாதத்தை தொட்டு வணங்கினார். ஷீரடிக்கு விஜய்யின் நெருங்கிய நண்பரும், தொழில் அதிபருமான விஷ்ணு ரெட்டியின் மனைவியும், அவரது மகளும் உடன் சென்று இருந்தனர்.

வேளாங்கண்ணியில் பரபரப்பு: ஆன்மீகப் பயணம் செய்து வரும் விஜய், இன்று
வேளாங்கண்ணி ஆலயத்தில் அதிகாலை நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார் என்றும் அதைத்தொடர்ந்து நாகூர் தர்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தெரியாத ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டமாக சர்ச்சுக்குள் புகுந்தனர். விஜய் அங்கு வராத நிலையில் இங்கிருந்தவர்கள் டிவிகே, டிவிகே என முழக்கமிட்டதால் திருப்பலி 30 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் இருக்கும் நிலையில், இதைப்பார்த்த இணையவாசிகள் சரியா தற்குறி கூட்டம் என்பதை நிரூபித்து விட்டார்கள் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Read more about: vijay tvk விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X